உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூரில் ஆயுதங்கள் பறிமுதல்

மணிப்பூரில் ஆயுதங்கள் பறிமுதல்

இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கூகி மற்றும் மெய்டி இனத்தவர் இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் கலவரம் வெடித்தது. தற்போது மாநிலத்தில் அமைதி திரும்பி வருகிறது. இந்நிலையில், காக்சிங் மற்றும் தவ்பால் மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காக்சிங் மாவட்டத்தின் வபகாய் நடேகாங் டர்னமே பகுதியில் தோட்டாக்களுடன் கூடிய மூன்று தானியங்கி துப்பாக்கிகள், 14 கையெறி குண்டுகள், சிறு பீரங்கி, எம்.கே., 3 வகை கையெறி குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.தவ்பால் மாவட்டத்தின் சிங்காம் சிங் பகுதியில் நடந்த மற்றொரு சோதனையில், தோட்டாக்களுடன் கூடிய ஒரு தானியங்கி துப்பாக்கி, 81 எம்.எம்., ரக பீரங்கி, கையெறி குண்டுகள், கண்ணீர் புகைகுண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை