உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கார்கில், சியாச்சின், கல்வான் பகுதிகளை பார்க்க சுற்றுலா பயணியருக்கு ராணுவம் அனுமதி

கார்கில், சியாச்சின், கல்வான் பகுதிகளை பார்க்க சுற்றுலா பயணியருக்கு ராணுவம் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புனே: கார்கில், கல்வான், சியாச்சின் பகுதிகளை பார்க்க சுற்றுலா பயணியருக்கு ராணுவம் அனுமதி அளித்துள்ளது.ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி நேற்று கூறியதாவது: சமீபத்திய சட்டசபை தேர்தலுக்கு பின் அமைந்த புதிய அரசால், ஜம்மு - காஷ்மீர் சுற்றுலா துறை மகத்தான வளர்ச்சியை எட்டியுள்ளது. பயங்கரவாதம் நிறைந்திருந்த அங்கு தற்போது அமைதி நிலவுவதால், சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 48 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், சாகச நடவடிக்கைகளை ஊக்குவிக்க இந்திய ராணுவம் உறுதி ஏற்றுள்ளது. மலையேறுதல் போன்ற சாகசங்களில் பயிற்சியாளர்கள் உதவியுடன் பொதுமக்கள் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக உள்ளூர்வாசிகளுக்கு பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. டிரான்ஸ் - ஹிமாலயன் மலையேற்றம், உத்தரகண்டில் உள்ள 'சோல் ஆப் ஸ்டீல்' மலையேற்றம் மற்றும் சியாச்சின் பனிப்பாறை பகுதியிலும் மலையேறும் சாகசங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. போர்க்கால அனுபவங்களை சுற்றுலா பயணியர் தெரிந்து கொள்ளும் வகையில், கார்கில், கல்வான் பள்ளத்தாக்கு, சியாச்சின் பனிப்பாறை போன்ற பகுதிகளை அவர்களுக்காக திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Baburaj
நவ 29, 2024 16:38

The Nubra valley & the Dry River bed of Nubra rier is the best place for off roading experiences &may be sui to organise National event for off road rally


Baburaj
நவ 29, 2024 16:28

Good decision This will improve tourism & லோக்கல்ஸ் will benefit more Also வி will understand the tough & hostile environment faced by the Indian Army அருமை that தி நுப்ரா


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 28, 2024 12:54

சீனா நமது பகுதிகளை ஆக்கிரமித்துவிட்டது என்று நேரில் பார்த்தது போல கதை விடும் தேசவிரோதிகளைக் கூட்டிக்கொண்டு போய்க் காட்டுங்கள் .....


கிஜன்
நவ 28, 2024 10:18

அருமையான செய்தி .... இந்தியாவின் மிக சிறப்பான இந்த பகுதியில் ....எப்பவும் இந்தியர்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் ....


சிட்டுக்குருவி
நவ 28, 2024 07:24

ஒரு சிறப்பான செய்தி. சாகசங்களை விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை