உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹேர் க்ளிப், பாக்கெட் கத்தியை பயன்படுத்தி பிரசவம்: ரயில் நிலையத்தில் உதவிய ராணுவ மருத்துவர்!

ஹேர் க்ளிப், பாக்கெட் கத்தியை பயன்படுத்தி பிரசவம்: ரயில் நிலையத்தில் உதவிய ராணுவ மருத்துவர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜான்சி: உ.பி., மாநிலம் ஜான்சி ரயில் நிலையத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹேர் க்ளிப், பாக்கெட் கத்தியை பயன்படுத்தி குழந்தையை பிரசவிக்க உதவிய ராணுவ மருத்துவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.இது குறித்து வட மத்திய ரயில்வேயின் ஜான்சி பிரிவு மக்கள் தொடர்பு அதிகாரி மனோஜ் குமார் சிங் கூறியதாவது: நேற்று பன்வெல்-கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணிற்கு கடுமையான பிரசவ வலியை எதிர்கொண்ட நிலையில், அவரை உறவினர்கள் ஜான்சி ரயில் நிலையத்தில் இறக்கினர்.சூழ்நிலையை அறிந்த ஒரு பெண் டிக்கெட் பரிசோதகரும் ஒரு ராணுவ அதிகாரியும் விரைந்து வந்து அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு உதவினர். இந்த நிலையில் ராணுவத்தின் மருத்துவ பிரிவை சேர்ந்த மேஜர் டாக்டர் ரோஹித் பச்வாலா 31, ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது அவர் எதிரே ஒரு ரயில்வே ஊழியர் சக்கர நாற்காலியில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை அவசரமாக அழைத்துசெல்வதை அவர் கண்டார். உடனே டாக்டர் ரோஹித் பச்வாலா அந்த பெண்ணிற்கு ரயில்வே பிளாட்பாரத்தில் குழந்தை பிரசவிக்க உதவினார். இவ்வாறு மனோஜ் குமார் சிங் கூறினார்.மேஜர் டாக்டர் ரோஹித் பச்வாலா கூறுகையில், 'அந்த ஆபத்தான நேரத்தில் என்னிடம் இருந்த கருவிகளை நம்பியிருக்க வேண்டியிருந்தது. தொப்புள் கொடியை இறுக்க நான் ஒரு ஹேர் க்ளிப் பயன்படுத்தினேன். குழந்தை நிலையாக இருந்ததால், பாக்கெட் கத்தியை வைத்து வெட்டினேன். தேவையான உதவி அளித்த உடன் குழந்தை பிரசவம் ஆனது. ரயில்வே ஊழியர்களின் ஏற்பாட்டில் தாயும் சேயும் உள்ளூர் மருத்துவனைக்கு மாற்றப்பட்டனர். அவசர நிலையை வெற்றிகரமாக கையாள தெய்வத்தின் ஆசி இருந்தது.ஒரு மருத்துவராக, நாம் எல்லா நேரங்களிலும், போக்குவரத்திலும் கூட அவசரநிலைகளுக்கு தயாராக இருக்க வேண்டும். இரண்டு உயிர்களைக் காப்பாற்ற உதவ முடிந்ததை ஒரு ஆசீர்வாதமாகக் கருதுகிறேன் என்றார்.சமூகவலைதளத்தில் இந்த சம்பவம் வைரலான நிலையில் ''மேஜர் ரோஹித்துக்குப் பாராட்டுகள், ஒரு உண்மையான ஹீரோ', 'கடமையின் அழைப்பைத் தாண்டிச் சென்ற ராணுவ டாக்டருக்குப் பாராட்டுகள். புதிதாகப் பிறந்தவர்களுக்கு ஆசீர்வாதங்கள்'' என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

KRISHNAN R
ஜூலை 07, 2025 07:22

நல்ல....மனிதரடா.. பாரினில்


Pmnr Pmnr
ஜூலை 06, 2025 22:45

மருத்துவருக்கு நன்றி


Raghavan
ஜூலை 06, 2025 22:29

hats off to the Dr. Major


rasaa
ஜூலை 06, 2025 22:09

வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் டாக்டர். இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும். தாய்க்கும், சேய்க்கும் வாழ்த்துக்கள்.


Ganapathy
ஜூலை 06, 2025 20:39

இரு உயிர்களை காத்த கடவுள் இவர். இதே உலகில் இங்கு ஒரு உயிர் அடித்துக் கொல்லப்பட்டதை கண்டுக்காத முதல்வனும் இருக்கிறார்.


Anantharaman Srinivasan
ஜூலை 07, 2025 00:34

இங்கு தமிழகத்தில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டது ஒரு உயிர் அல்ல. கடந்த நான்கு வருடத்தில் 31 உயிர்கள்.


Chandru
ஜூலை 06, 2025 20:36

God bless you Major. Rohith


கல்யாணராமன் மறைமலை நகர்
ஜூலை 06, 2025 20:20

இப்படி ரயில் நிலையத்தில் ஒரு மருத்துவமனைகூட இல்லாமல் வைத்திருக்கும் முதல்வர் உடனே பதவி விலக வேண்டும்.


Manaimaran
ஜூலை 06, 2025 19:55

மூவரும் இறைவனுக்கு நிகரானவர்கள் வாழ்துகிறேன் வணங்குகிறேன் உதவியின் பலன் தலைமுறை தாண்டியும் தொடரும்


Ramesh Sargam
ஜூலை 06, 2025 19:44

அப்படிபோன்றவர்களால்தான் நமக்கு தொடர்ந்து பருவமழை பெய்கிறது. நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை - கேள்விப்பட்டிருப்பீர்கள். அது இதுதான். மனமார்ந்த வாழ்த்துக்கள் அந்த ராணுவ மருத்துவர் மற்றும் அவருக்கு உதவி புரிந்தவர்களுக்கு. தாயும், சேயும் நலமுடன் இருக்க இறைவன் அருள்புரிவாராக.


புதிய வீடியோ