உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எந்த சூழ்நிலையும் சமாளிக்க ராணுவம் தயார்; தலைமை தளபதி உபேந்திர திவேதி திட்டவட்டம்

எந்த சூழ்நிலையும் சமாளிக்க ராணுவம் தயார்; தலைமை தளபதி உபேந்திர திவேதி திட்டவட்டம்

புதுடில்லி: எந்த சூழ்நிலையையும் சமாளிக்க ராணுவம் தயாராக உள்ளது என தலைமை தளபதி உபேந்திர திவேதி தெரிவித்தார்.இந்திய ராணுவம் உருவாக்கப்பட்ட தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ம் தேதி ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது.இதையொட்டி, ஜனாதிபதி, பிரதமர், ராணுவ தலைமை தளபதி உள்ளிட்டோர் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி கூறியதாவது: புனேவில் ராணுவ தின கொண்டாட்டங்கள், பாரம்பரியத்துடன் உள்ள தொடர்பை பிரதிபலிக்கிறது.வடக்கு எல்லையில் உள்ள சூழ்நிலை உணர்வுப்பூர்வமானது. வடக்கு எல்லையில் நவீன கருவிகள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையையும் சமாளிக்க ராணுவம் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பிரதமர் மோடி பாராட்டு இது தொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:ராணுவ நாளான இன்று நமது நாட்டின் பாதுகாப்பின் காவலராக விளங்கும் இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன்ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்த தைரியமிக்கவர்கள் செய்த தியாகங்களை நினைவு கூர்வோம்.நமது எல்லைகளைப் பாதுகாப்பதோடு, இயற்கை பேரிடர்களில் மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்குவதில் இந்திய ராணுவம் முத்திரை பதித்துள்ளது. இந்திய ராணுவம் உறுதிப்பாடு, தொழில்முறை, அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துஇது தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளியிட்ட அறிக்கை: இந்திய எல்லைகளை இரவும் பகலும் தங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலுடன் பாதுகாக்கும் தைரியமிக்க ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ராணுவ நாள் வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியரும் உங்கள் துணிச்சலுக்கும் தியாகத்துக்கும் வணக்கம். வாழ்க இந்தியா!. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Alagusundram Kulasekaran
ஜன 16, 2025 14:26

நான் ஒரு இந்தியன் என பெருமை கொள்ள செய்யும் இந்திய ராணுவத்திற்க்கு இன்றைய நாளில் மிக பெரிய சலுயூட்


தாமரை மலர்கிறது
ஜன 15, 2025 20:28

உள்நாட்டிலேயே மதம், மொழி, அர்பன் நக்சலைட் என்று சில தீவிரவாதிகள் நாட்டை சீர்குலைக்க திட்டம் போடுகிறார்கள். அவர்களை ஒடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.


Saravanan
ஜன 15, 2025 15:29

தேச துரோகின்னு பெயர மாத்திக்க


Ramesh Sargam
ஜன 15, 2025 12:59

அனைத்து முப்படை வீரர்களுக்கும் என் சிரம்தாழ்ந்த நமஸ்காரங்கள் மற்றும் மகரசங்கராந்தி வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த். வந்தே மாதரம்.


sundarsvpr
ஜன 15, 2025 11:57

வெளிநாட்டு பாதுகாப்பு நல்ல நிலையில் உள்ளது. நம் நாட்டு பிரதமர் வெளிநாடுகளுக்கு சென்று வருவதால் அமெரிக்காவை தவிர மற்ற நாடுகள் நட்புரீதியில் உள்ளன. அமெரிக்காவும் சிறுது சிறிதாக மாற்றிக்கொள்ளும் இதுபோல் நம் நாட்டு பிரதமர் உள்நாட்டில் பரவலாக விசிட் செய்யவேண்டும். தேசிய உணர்வு வளரும். இதுபோல் காங்கிரஸ் கட்சி தேசிய தலைமை குடும்ப தலைமையை தவிர்த்து நாடுமுழுவதும் செல்லவேண்டும். இல்லையெனில் தேசியம் என்ற வார்த்தை காணாமல் போகும்.


திகழ்ஓவியன்
ஜன 15, 2025 12:30

எது உங்கள் ஊரில் தேசியம் இரண்டாவது வரி செலுத்தும் TN க்கு வெறும் 7057 கோடி வரி பகிர்வு, வரி குறைவாக செலுத்தும் UP க்கு 31039 கோடி, அதாவது வரியே செலுத்தாத UP MP BEEHAR 3 மாநிலம் 62024 கோடி, அனால் வரி அதிகம் செலுத்தும் தென் நாட்டிற்கு மொத்தம் 27336 கோடி இது தான் உங்க தேசியம் சிரிப்பா சிரிக்குது , இவர்கள் பணத்தில் அவர்களுக்கு சொகுசு ரோடு எல்லாம்


திகழ்ஓவியன்
ஜன 15, 2025 11:51

முதலில் உங்க பார்லிமென்ட் அட்டாக் நடந்ததே அப்போ என்ன பண்ணினீர்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 15, 2025 12:24

உங்க பார்லிமென்ட் இல்லை.. பார்லிமென்ட் அனைவருக்குமானது. தேசவிரோதிகளுக்கும் அதுதான் மக்களவை.. மக்களவையைப் பாதுகாக்க அதற்கென சி ஐ எஸ் எஃப் இருக்கிறது... எல்லையைப் பாதுகாக்க பி எஸ் எஃப் இருக்கிறது.. ராணுவத்தின் பணிகள் வேறு ..


சமீபத்திய செய்தி