உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூரில் ராணுவம் அதிரடி வேட்டை; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்; பதுங்கு குழிகள் அழிப்பு

மணிப்பூரில் ராணுவம் அதிரடி வேட்டை; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்; பதுங்கு குழிகள் அழிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இம்பால்: மணிப்பூரில் ராணுவத்தினர் நடத்திய சிறப்பு அதிரடி தேடுதல் வேட்டையில் ஏராளமான ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. பயங்கரவாத அமைப்பினரின் பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டன.இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x9gegy9l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்னுபுர், சுராசந்த்புர், கங்போக்கி, இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, சேனாபதி, தொபல், ஜிரிபம் உள்ளிட்ட மாவட்டங்களில் ராணுவம் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. ரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், மணிப்பூர் மாநில போலீசார், சி.ஆர்.பி.எப், பி.எஸ்.எப் மற்றும் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினரும் பங்கேற்றனர். பிஷ்னுபுர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டு தேடுதல் வேட்டையில், துப்பாக்கிகள், ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதேபோல், சந்தேல் மாவட்டத்தில் ஏராளமான துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. காங்போக்கி மாவட்டத்தில் சோதனையின் போது, பதுங்கு குழிகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் வேட்டையில் 114 ஆயுதங்கள், வெடிபொருட்கள், கையெறி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

தேவராஜன்
மார் 09, 2025 08:27

மணிப்பூரில் உள்ள அனைத்து மத அமைப்புகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும், குறிப்பாக மிஷனரிகளின் தகவல் தொடர்பு மற்றும் வங்கிக் கணக்குகளை தொடர்ந்து மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்.


Sridhar
மார் 08, 2025 16:15

இதை ஏன் முன்பே செய்யல? சரி இப்பவாவது முழுமூச்சோட மொத்தமா எல்லா பிரிவினை வெளிநாட்டு தீவிரவாதிகளை தீர்த்துக்கட்டினால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரலாம். தொடர்ந்து செய்வார்களா?


veeramani hariharan
மார் 08, 2025 12:44

What about medias in T.N. No one us speaking about this


Sudha
மார் 08, 2025 14:32

தமிழ் வாழ்க


veeramani hariharan
மார் 08, 2025 12:44

Now what Mr.stalin and other are saying about Manipur


Sudha
மார் 08, 2025 12:24

ராகுல் பிரியங்கா அடுத்த வாரம் போறாங்க


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 08, 2025 11:38

தமிழகத்திலும் நக்சல்கள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதைச் செய்திகள் காட்டுகின்றன ... ஏற்கனவே வெடித்தது குண்டல்ல , சிலிண்டர்தான் என்கிற சர்ச்சையும் எழுந்த மாநிலம் ..... ஆனால் அமித் ஷா திமுகவுடன் ஆனந்தக்களிப்பு கொண்டு இருப்பதால் கண்டுகொள்ளப்பட மாட்டாது .....


Bhakt
மார் 08, 2025 11:34

டிரம்ப் POTUS ஆனாதிலிருந்து பப்பு ஜி இருக்கற இடமே தெரியலையே


Laddoo
மார் 08, 2025 11:06

கனியக்காவை உடனே அங்கே எரியும் மெழுகுவர்த்தியோடு அனுப்பவும்


வீரபத்திரன்,கருங்காலக்குடி
மார் 08, 2025 10:53

அமெரிக்காவில் டிரம்ப் பதவிக்கு வந்தவுடன் Deep state ஒழிந்து மறைந்து விட்டது இதுவரை மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கு அங்குள்ள தீவிரவாதிகளுக்கு அமெரிக்காவின் சோரோஸ் கொடுத்து வந்த ஏராளமான டாலர் பணம் சுத்தமாக நின்று விட்டது மேற்கொண்டு தீவிரவாதத்தை தொடர செலவுக்கு பணமில்லாத காரணத்தால் அங்குள்ள கிளர்ச்சியாளர்கள் வேறு வழியின்றி இந்திய ராணுவத்திடம் சரணடைந்தும் ஏராளமான ஆயுதங்களை ஒப்படைத்தும் வருகிறார்கள் எனவே மணிப்பூரில் இனிமேல் வன்முறைக்கு வழியில்லை. காங்கிரஸ் இனிமேல் மணிப்பூரில் குழப்பம் விளைவிக்க வேறு வழியை தேட வேண்டும்.


Dharmavaan
மார் 08, 2025 12:08

மணிப்பூரை வைத்து இனி காங்கிரெஸ்ஸோ த்ரவிடியவோ அரசியல் செய்ய முடியாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை