உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திரிணமுல் போராட்ட மேடையை அகற்றிய ராணுவம்; மத்திய அரசு மீது மம்தா கோபம்

திரிணமுல் போராட்ட மேடையை அகற்றிய ராணுவம்; மத்திய அரசு மீது மம்தா கோபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: கோல்கட்டாவில் ராணுவத்துக்கு சொந்தமான இடத்தில் திரிணமுல் காங்கிரஸ் அமைத்து இருந்த போராட்ட மேடையை ராணுவம் அகற்றியது. பல முறை நினைவூட்டியும் அகற்றாத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால், இதனை ஏற்காத மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராணுவம் மூலம் மத்திய அரசு தங்களின் குரலை ஒடுக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அகதிகள் வெளிமாநிலங்களில் துன்புறுத்தப்படுவதாகவும், இதனை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக அம்மாநிலத்தை ஆளும் திரிணமுல் காங்கிரஸ் அறிவித்து இருந்தது. இதற்காக கோல்கட்டாவின் மைதான் பகுதியில் உள்ள மஹாத்மா காந்தி சிலை அருகே மேடை அமைக்கப்பட்டது. இந்த இடம், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கிழக்கு பிராந்தியம் அமைந்துள்ள வில்லியம் கோட்டைக்கு அருகில் இந்த இடம் இருந்தது.இந்நிலையில், இந்த போராட்ட மேடையை ராணுவத்தினர் இன்று அகற்றினர். இது தொடர்பாக கிழக்கு பிராந்திய ராணுவ அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 2 நாட்கள் மட்டுமே இந்த இடத்தில் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. 3 நாட்களுக்கு மேல் நடக்கும் நிகழ்வுகளுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும். 2 நாட்கள் மட்டுமே அனுமதி வாங்கிவிட்டு ஒரு மாதத்துக்கு மேல் தற்காலிக மேடை அமைத்து இருந்தனர். அங்கு அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக மேடையை அகற்றும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு பல முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், அந்த மேடை அகற்றப்படவில்லை. இதனையடுத்து கோல்கட்டா போலீஸ் கமிஷனரிடம் தகவல் தெரிவித்துவிட்டு அந்த மேடையை ராணுவத்தினர் அகற்றினர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: பிரதமர் மோடி மேற்கு வங்கம் வரும் போது எங்களிடம் அனுமதி பெற வேண்டும். எங்களின் குரலை அவர்களால் தடுக்க முடியாது. மேற்கு வங்கத்துக்கு எதிராக அட்டூழியம் தொடர்ந்தால், தினமும் போராட்டத்தில் ஈடுபடுவோம். ராணுவம் மீது குற்றம் இல்லை. அதற்கு பாஜ உத்தரவிட்டு உள்ளது. இது மோசமான அரசியல் விளையாட்டு. போராட்டகளத்தை வேறு இடத்திற்கு மாற்ற கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பாஜ.,வின் செயல் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. ராணுவத்தை தவறாக பயன்படுத்துகிறது என குற்றம்சாட்டினார்.பாஜ வரவேற்புராணுவத்தின் நடவடிக்கைக்கு பாஜ வரவேற்பு தெரிவித்துள்ளது. உரிய அனுமதி இல்லாமல் திரிணமுல் காங்கிரஸ் போராட்ட மேடை அமைத்து இருந்தது. பாஜ போராட்டத்துக்கு அவர்கள் அனுமதி வழங்கியது இல்லை. திரிணமுல் காங்கிரசுக்கு எதிராக ராணுவம் எடுத்த நடவடிக்கை சரியானதே. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Tamilan ivan thravidan
செப் 02, 2025 10:31

மமதையில் இவரின் ஆக்கிரமிப்பு...ராணுவ இடத்திற்கே இப்படி என்றால் சாமானியன் நிலை...bulldozer வைத்து தகர்த்து எறியுங்கள். எதையும் முளையிலே கிள்ளி எறிய வேண்டும். வெளிநாட்டு தீவிரவாதத்தை விட உள்ளூர் நாச காரிகள் மிகவும் ஆபத்தானது


Iyer
செப் 02, 2025 02:20

ராணுவம் மேடையை தான் அகற்றியது. மேற்குவங்க மக்கள் இந்த அம்மாவையும் TMC கட்சியையும் அகற்றும் நேரம் வந்துவிட்டது


S Srinivasan
செப் 01, 2025 22:23

Didi govt to be dismissed for united india if PM not taking action another jammu and Kashmir is surr


Tamilan
செப் 01, 2025 22:15

ராணுவமும் பாஜாவின் அரசியல் ஏஜெண்டாக மாறி பலநாட்கள் ஆகிவிட்டது. நாட்டில் அறிவிக்கப்படாத சர்வாதிகார ராணுவ ஆட்சி நடக்கிறது என்பதை ஒரு சில புல்லுருவிகள் தவிர அனைவருக்கும் தெரியும்


ராஜாராம்,நத்தம்
செப் 01, 2025 23:10

ரோஹிங்கியாவுக்கு கோபம் வருவது இயற்கைதானே


Krishna Gurumoorthy
செப் 02, 2025 00:50

முட்டாள்தனமான பதிவு


ராம் சென்னை
செப் 02, 2025 09:19

உங்களுக்கு மூளை மங்கி விட்டது என்பது நன்றாக தெரிகிறது திமுகவின் கொத்தடிமையே.


GMM
செப் 01, 2025 21:28

ராணுவ பணியில் சுப்ரீம் கோர்ட் தலையிடுவது நல்லது அல்ல. சிறு வயதில் ஒரு ராணுவ ஜீப் முன்பு இரு புல்லட்டில் ராணுவ வீரர்கள். அந்த ஜீப்பை நீதிபதி, கலெக்டர் போன்ற எந்த உயர் அதிகாரியும் முந்தி செல்ல முடியாது என்றனர். அவ்வளவு மரியாதை. பிரதமர் மோடி மேற்கு வங்கம் வரும் போது எங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்பதை நீதிமன்றம் வேடிக்கை பார்பது தவறு. பிரதமர் பதவியின் மாண்பை முறைபடுத்தும் கடமை நீதிமன்றத்திற்கு உண்டு.


GMM
செப் 01, 2025 21:26

போலீஸ் கமிஷனரிடம் தகவல் தெரிவித்து விட்டு முறையாக தான் மேடையை ராணுவத்தினர் அகற்றி உள்ளனர். இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடம் அவசர தேவை இல்லாமல் பிற மாநில பயன்பாட்டிற்கு உபயோகிக்க கூடாது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் இந்திய குடிமகன் இல்லையா? எப்படி அகதிகள் நிலை அடைவர்.வெளிமாநிலங்களில் துன்புறுத்தல் என்பது பொய். அங்கு புகார் பதிவு இருக்கும்.


Mecca Shivan
செப் 01, 2025 21:14

இப்படி ஒரு தரம் தாழ்ந்த முதல்வரை மேற்கு வங்காளம் இது வரை கண்டதில்லை .. இவர் ஒரு தேசத்துரோகி மட்டுமல்ல மிக பெரிய வில்லி நடிகை


Ganapathy
செப் 01, 2025 21:12

காங்கிரஸ் பாரதத்தை ஆண்ட போது எதிர்கட்சி ஆட்சியைக் கவிழ்க்க என்ன முகாந்திரம் இருந்ததோ இன்று அதைவிடக் கொடிய தேசவிரோத காரணங்களை மமதா ஆட்சி உண்டு பண்ணியுள்ளது. ஒட்டு மொத்த கள்ளக்குடி ரோஹிங்கியாக்களும் இவளது ஆட்சில பாரதம் முழுதும் திட்டமிட்டு பரவப்பட்டனர்


Venkatasubramanian krishnamurthy
செப் 01, 2025 21:11

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அகதிகள் வெளி மாநிலங்களில் துன்புறுத்தப்படுவதாக குறிப்பிடுகிறார் மம்தா. சொந்த மாநில மக்கள் ஏன் அகதிகளாக வேறு மாநிலத்திற்கு செல்கிறார்களென கேள்வி எழுவதை அவர் உணரவில்லையா? அல்லது வங்கதேச மற்றும் ரோஹிங்க்யாக்களை சொந்த மாநில மக்களாகக் கருதுகிறாரா மம்தா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை