உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வின் தவறான கொள்கைகளால் ராணுவ வீரர்கள் பாதிப்பு: ராகுல்

பா.ஜ.,வின் தவறான கொள்கைகளால் ராணுவ வீரர்கள் பாதிப்பு: ராகுல்

புதுடில்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 4 பேர் வீரமரணம் அடைந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பா.ஜ.,வின் தவறான கொள்கைகளால் நமது ராணுவ வீரர்களும், அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

கவலை

இது தொடர்பாக ‛எக்ஸ் ' சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: இன்று, காஷ்மீரில் மற்றொரு பயங்கரவாத தாக்குதலில் நமது வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதுடன், அவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன். இதுபோன்று துயர சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடப்பது மிகுந்த கவலையையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. தொடர்ந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது காஷ்மீரில் நிலவும் மோசமான சூழ்நிலையை எடுத்து காட்டுகிறது. பா.ஜ.,வின் தவறான கொள்கைகளால் நமது ராணுவ வீரர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு குறைபாடுகளுக்கு அரசு முழு பொறுப்பு ஏற்றுக் கொள்வதுடன், நாட்டிற்கும், வீரர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒவ்வொரு குடிமகனும் எதிர்பார்க்கின்றனர். இந்த சோகமான நேரத்தில், பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக நிற்கின்றனர். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

மாறவில்லை

காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் என்கவுன்டரில் தைரியமிக்க வீரர்கள் 4 பேர் வீரமரணம் அடைந்தது வேதனை அளிக்கிறது. பாரத மாதாவிற்காக உயிர்தியாகம் செய்த நமது தைரியமிக்க வீரர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக நமது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். கோழைத்தனமான பயங்கரவாதிகள் நடத்தும் இந்த தாக்குதலுக்கு எதிராக வலுவான மற்றும் வலிமையான கண்டனங்கள் மட்டும் போதாது. காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அனைத்தையும் வழக்கமான நடவடிக்கையாக மோடி அரசு பார்ப்பதால் எதுவும் மாறவில்லை. தாக்குதலால் காஷ்மீரில் பதற்றம் ஏற்பட்டுள்ளதை அவர்கள் அறிய வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கார்கே கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

Ramalingam Shanmugam
ஜூலை 22, 2024 13:18

கொலம்பியா கூப்பிடுறார் போங்க தாய்லாந்து உங்களை அழைக்கிறது சென்று வாருங்கள்


Rama SV
ஜூலை 21, 2024 19:07

சாப்பிட்டு போ...படுங்க


நிக்கோல்தாம்சன்
ஜூலை 21, 2024 06:54

அப்படீன்னா கருநாடக காங்கிரஸ் முதல்வர் தனியார் கம்பெனியில் இடஒதுக்கீடு என்று கொண்டுவந்ததினால் ஆகும் பாதிப்புகளுக்கு நீங்க பொறுப்பேத்துப்பீங்களா யுவர் ஹானர்


S Ramachandran
ஜூலை 19, 2024 15:45

பிஜேபி என்ன தவறு செய்தது என்று ராகுளால் சொல்ல முடியுமா. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எத்தனை ஆயிரம் இராணுவத்தினர் மற்றும் மக்கள் இறந்தனர் என்று சொல்ல முடியுமா.காங்கிரஸ் காலத்தில் பார்டர் மட்டுமில்லை டில்லி வரையில் தீவிர வாதம் இருந்தது


nagendhiran
ஜூலை 19, 2024 12:51

அப்படி என்ன பாதிப்புனு உங்க கிட்ட சொன்னாங்க பப்பு?


இராம தாசன்
ஜூலை 19, 2024 02:24

இங்கே தமிழ் நாட்டில் தினமும் பொது மக்கள் வெட்டி கொலை செய்யப்படுகிறார்கள் அதை பற்றி ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள்


sundarsvpr
ஜூலை 18, 2024 11:06

ஆற்றல் உள்ள நரேந்திரன் தலைமையில் கூட்டணி அரசு தேர்தலில் சிறிய பின்னடைவை பெற்றுள்ளது. ஆனால் சரியான தலைமை இல்லாத எதிர் கட்சியை மக்கள் தேர்ந்துஎடுத்துள்ளனர். தேசத்திற்கு பின்னடைவு ஏற்பட இதுவும் காரணமாய் அமையலாம்.


S.V.Srinivasan
ஜூலை 18, 2024 09:42

சரி கரெக்டான கொள்கை என்னன்னு நீயே சொல்லிடு பப்பு. அட ஏண்?


Kalyanam Siv
ஜூலை 18, 2024 04:56

பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது போல ராணுவ வீரர்களின் விஷயத்தில் நடந்து வருகிறது. குறிப்பாக சிப்பாய்களின் நலன் புறக்கணிக்க படுகிறது. மிகுந்த பார பட்சம் காட்டப்படுகிறது. குறிப்பாக எம் எஸ் பி மற்றும் பென்ஷன், உடல் ஊனமுற்ற பென்ஷன் முதலியவற்றில் வேண்டுமென்றே குறைத்திருக்கிறார்கள். அவர்களின் நலன் காக்க படுவதில்லை. அவர்களின் தியாகமும், சேவையும் மதிக்க படுவதில்லை


R K Raman
ஜூலை 17, 2024 12:22

இந்த ஆளை நாடு கடத்துங்க முதலில்


மேலும் செய்திகள்