உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நெருக்கடியான நேரத்தில் மீட்பு பணியில் உதவிய ராணுவம்: குவிகிறது பாராட்டு

நெருக்கடியான நேரத்தில் மீட்பு பணியில் உதவிய ராணுவம்: குவிகிறது பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாட்டில் நெருக்கடியான நேரத்தில் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் வழங்க உறுதி எடுத்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.நேற்று(ஆகஸ்ட் 27) பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள லாசியன் பகுதியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து அங்குள்ள பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் செயல்பாட்டிற்கு வந்தன. இந்நிலையில் இந்திய ராணுவம் மீட்புப்பணியில் இறங்கியது.இது தொடர்பாக இந்திய ராணுவம் பதிவிட்டுள்ளதாவது:கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்தன. எங்களுக்கு தகவல் கிடைத்ததும், ஒரு துணிச்சலான மீட்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் ராணுவத்தின் 3 சீட்டா ஹெலிகாப்டர்களின் தீவிரமிக்க செயல்பாட்டினாலும், வீரர்களின் துரித நடவடிக்கை காரணமாகவும், 27 பேரை வெற்றிகரமாக வெளியேற்ற முடிந்தது.நெருக்கடியான சமயத்தில் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆதரவையும், வழங்க ராணுவம் உறுதி ஏற்றுள்ளது.இவ்வாறு இந்திய ராணுவம் பதிவிட்டுள்ளது.மீட்பு பணியில் ஈடுபட்டு மக்கள் உயிரை காப்பாற்றிய ராணுவத்தினரின் செயலை பொதுமக்கள், அரசு அதிகாரிகள், நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Subramanian
ஆக 29, 2025 08:23

மனித நேயத்திற்க்கு பாராட்டுகள்


Padmasridharan
ஆக 29, 2025 06:34

அங்க, ராணுவம் மக்களுக்கு நெருக்கடியில் உதவி பன்றாங்க, இங்க காவலர்கள் உதவி பண்ற மாதிரி நெருக்கடி கொடுக்கறாங்க சாமி.


VENKATASUBRAMANIAN
ஆக 28, 2025 18:57

ராகுலிடம் சொல்லி புரிய வையுங்கள்.


karthikeyan
ஆக 28, 2025 18:07

ஜெய்ஹிந்த் ....


raja
ஆக 28, 2025 17:51

Jaihind


V RAMASWAMY
ஆக 28, 2025 17:38

Congratulations with gratitude our Great Army brothren. You are our saviours any time day or night. God Bless you all.


Chandru
ஆக 28, 2025 17:14

மாநிலதொலைநோக்கு பார்வைதான் இதற்கு பேருதவி ஆக இருந்தது . மத்திய அரசு ஸ்டிக்கர் ஒட்டி கொள்கிறது


V Venkatachalam
ஆக 28, 2025 22:09

இந்த தளத்தில் உள்ள வாசகர்கள் அவனுக்கு சரியான பதிலடி கொடுக்கணும்.


sathish Renga
ஆக 28, 2025 16:55

vazhthukkal


மதன்
ஆக 28, 2025 16:53

தம் உயிர்களையும் பொருட்படுத்தாது சேவை செய்யவும் நிஜமான தெய்வங்களுக்கு என்னுடைய பெரிய சல்யுட்.


Ganesh
ஆக 28, 2025 16:46

மிக்க மகிழ்ச்சி... ஒவ்வொரு இந்தியர்களின் உயிரே மதிக்கும் அரசுக்கு நன்றி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை