உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  திரை நட்சத்திரங்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்தேன் கைதான சலீம் வாக்குமூலம்

 திரை நட்சத்திரங்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்தேன் கைதான சலீம் வாக்குமூலம்

மும்பை: நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும், 'ரேவ் பார்ட்டி'களை ஏற்பாடு செய்து திரை பிரபலங்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக சமீபத்தில் போதைப்பொருள் பறிமுதல் வழக்கில் கைதான முகம்மது சலீம், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மஹாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் இருந்து, 2024 மார்ச்சில், 252 கோடி ரூபாய் மதிப்பிலான, 'மெபெட்ரோன்' போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தலில் சர்வதேச போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த முகம்மது சலீம் முகம்மது சுஹைல் ஷேக் என்பவர் ஈடுபட்ட தாக கூறப்படுகிறது. ஆடம்பர வாழ்க்கை முறைக்காக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இவர், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் விலை உயர்ந்த கார்கள், கைக்கடிகாரங்கள் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார். இந்நிலையில், முகம்மது சலீமை, இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் வாயிலாக 'ரெட் கார்னர்' நோட்டீஸ் அளித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தேடி வந்தனர். கடந்த மாதம், துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் கூறுகையில், 'கைதான சலீம், லேசர் விளக்குகளை ஜொலிக்கவிட்டு டி.ஜே., இசைக்கு நடனமாடும், ரேவ் பார்ட்டிகளை நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஏற்பாடு செய்து, திரை பிரபலங்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்துள்ளார். 'இவர், ஏற்பாடு செய்த ஒரு விருந்தில், தாவூத் இப்ராஹிமின் மருமகன் அலிஷா பார்க்கர் பங்கேற்றதும் தெரியவந்தது. 'இதைத்தொடர்ந்து, பார்ட்டிகளில் பங்கேற்ற பிரபலங்களின் விபரங்களை சேகரித்து, அவர்களிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்' என குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை