உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  ஹிந்துக்கள் ஒன்றோடு நிறுத்தக்கூடாது; 2 - 3 குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும்: அசாம் முதல்வர் அட்வைஸ்

 ஹிந்துக்கள் ஒன்றோடு நிறுத்தக்கூடாது; 2 - 3 குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும்: அசாம் முதல்வர் அட்வைஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குவஹாத்தி: ''அசாம் மாநிலத்தில் ஹிந்து மக்கள் தொகையின் வளர்ச்சி குறைந்து வருவதால், ஹிந்து தம்பதியர் ஒரு குழந்தையோடு நிறுத்தாமல், குறைந்தது இரண்டு, மூன்று குழந்தைகளாவது பெற்றெடுக்க வேண்டும்,'' என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வலியுறுத்தியுள்ளார். வடகிழக்கு மாநிலமான அசாமில், முஸ்லிம்கள் எண்ணிக்கை 40 சதவீதத்தை நெருங்கி வருவதாக சமீபத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியிருந்தார்.

எதிர்கால தலைமுறை

இந்நிலையில், மக்கள் தொகை அமைப்பு மாறி வருவது குறித்து, சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியுள்ளதாவது: சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகம் உள்ளது. ஹிந்துக்களிடையே குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. எனவே தான் ஹிந்துக்களை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள சொல்கிறேன். ஒரு குழந்தையோடு நிறுத்தாமல், குறைந்தது இரண்டு குழந்தைகள் பெற்றெடுங்கள். முடிந்தவர்கள் மூன்று குழந்தைகள் கூட பெற்றெடுக்கலாம். முஸ்லிம்கள் ஏழு, எட்டு குழந்தைகள் பெற்றுக்கொள்கின்றனர். இப்படியே சென்றால், அசாமில் அவர்களின் மக்கள் தொகை 40 சதவீதத்துக்கு மேல் செல்லும். ஹிந்துக்களின் மக்கள் தொகை 35 சதவீதத்துக்கு கீழே செல்வதை எதிர்கால தலைமுறையினர் சந்திக்க நேரிடும். நம் அண்டை நாடான வங்கதேசம், அடிக்கடி வடகிழக்கு இந்தியாவை பிரித்து, தங்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றது.

கோரிக்கை

போர் செய்யத் தேவையில்லை. அவர்களின் மக்கள் தொகை 50 சதவீதத்தை தாண்டினால் தானாகவே அது நடந்துவிடும். அசாம் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், முஸ்லிம்களுக்கு 48 சட்டசபை தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என, அக்கட்சியிடம் கோரிக்கை வைத்தார். அவரை இன்னமும் கட்சியை விட்டு நீக்கவில்லை. ஏனென்றால், முஸ்லிம் ஓட்டுகளை நம்பியே காங்கிரஸ் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ram
ஜன 01, 2026 15:02

நீதான் இந்து...


Vasan
ஜன 01, 2026 13:52

மதச்சார்பற்ற இந்தியாவில், ஒரு மாநிலத்தின் முதல்வர் இவ்வாறு பேசியிருப்பது கேவலமானது, வெட்கித்தலைகுனியவைக்கவேண்டியது, கண்டனத்திற்குரியது


சேகர்
ஜன 01, 2026 09:10

யார் வந்து ஸ்கூல் பீஸ், காலேஜ் feesகட்டுவார்கள்


thonipuramVijay
ஜன 01, 2026 05:00

முஸ்லிம்கள் சாப்பிட சோறு இல்லாவிட்டாலும் ...வேலை வெட்டி இல்லாவிட்டாலும் மூன்றிலிருந்து நான்கை பெற்று தள்ளிவிடுகிறார்கள் ....கேட்டால் எங்கள் தலைவர்கள் சொல்லியிருக்கிறார்கள் அதனால் பெற்றோம் என்கிறார்கள் ...இந்துக்களும் குறைந்தபட்சம் மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்


Thiru
ஜன 01, 2026 08:18

True


Haja Kuthubdeen
ஜன 01, 2026 16:57

உங்களை பெக்க கூடாதுன்னு வந்து தடுத்தாய்ங்களா...பெத்தா மட்டும் போதாது..பெற்ற குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி விடனும்..புள்ளிங்கோ மாதிரி இல்லாம இருந்தா சரிதான்.


N Sasikumar Yadhav
ஜன 01, 2026 17:24

புள்ளிங்கோகூட திருந்திடுவானுங்க ஆனால் ஒரு குறிப்பிட்ட பாடத்தை படித்துவிட்டு குண்டு வைக்க கிளம்பிடுறானுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை