உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பழங்குடியின பெண்கள் திறனை மேம்படுத்த உதவும் அசாம் ரைபிள்ஸ் படை

பழங்குடியின பெண்கள் திறனை மேம்படுத்த உதவும் அசாம் ரைபிள்ஸ் படை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இடாநகர்: பயங்கரவாதம், நக்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு சார்பில் 'ஆப்பரேஷன் சத்பாவனா' என்ற திட்டத்தின் வாயிலாக திறன் மேம்பாடு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதன்படி வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் வசிக்கும் ஓலோ பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை, துணை ராணுவப் படையான அசாம் ரைபிள்ஸ் படை முன்னெடுத்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் திராப் பகுதியில் வசிக் கும் ஓலோ பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள், தன்னிறைவு அடையும் வகையில், தையல் இயந்திரங்களை அசாம் ரைபிள்ஸ் படை யினர் வழங்கினர். இதன் வாயிலாக அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் எனவும் , சுயதொழில் மேற்கொள்ளவும் வழிவகை செய்யப் பட்டுள்ளது. இது குறித்து அசாம் ரைபிள்ஸ் படை வெளியிட்ட அறிக்கையில், 'அருணாச்சல பிரதேசத்தில் கிளர்ச்சியாளர்களால் பாதிக்கப்பட்ட திராப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 'இதன்படி, அப் பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட் டன' என, குறிப்பிடப்பட்டு ள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை