உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அசாம் வடகிழக்கு மாநிலங்களின் உற்பத்தி மையமாக மாறும்; பிரதமர் மோடி நம்பிக்கை

அசாம் வடகிழக்கு மாநிலங்களின் உற்பத்தி மையமாக மாறும்; பிரதமர் மோடி நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குவகாத்தி: அசாம் விரைவில் வடகிழக்கு மாநிலங்களின் உற்பத்தி மையமாக மாறும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். அசாம் மாநிலம் குவகாத்தியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: அசாம் முதலீட்டாளர்களுக்கு விருப்பமான இடமாக மாறியுள்ளது. அரசியல் ஸ்திரத்தன்மை, நல்லாட்சி மற்றும் சீர்திருத்தங்களே இந்தியாவின் மீதான உலக நம்பிக்கை அதிகரிக்க காரணம். அசாம் விரைவில் வடகிழக்கு மாநிலங்களின் உற்பத்தி மையமாக மாறும். உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், இந்தியாவின் பொருளாதாரம் நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. பா.ஜ., ஆட்சியின் போது அசாம் பொருளாதாரத்தின் மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாக இரட்டிப்பாகியுள்ளது. இந்தியாவின் செழிப்பில் கிழக்கு இந்தியா முக்கிய பங்கு வகித்தது என்பதற்கு வரலாறு சாட்சி. தற்போது இந்தியாவின் வளர்ச்சியில் வட கிழக்கு மாநிலம் வலிமையைக் காட்டப் போகிறது. நாடு வளர்ச்சிக்கான பாதையில் செல்லும் என்று, நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
பிப் 25, 2025 16:53

தினம் ஒரு வடை இன்பைக்கி அஸ்ஸாம் உளுந்து வடை.


vivek
பிப் 25, 2025 17:32

ஊசி போன வடை இருந்தா அப்புவுகு தூக்கி போடுங்க


varatha rajan
பிப் 25, 2025 15:58

தலைவரே ஒரு நண்பர் பதிவு போட்டு இருக்காரு அஸ்தம் வளர்ச்சி அடைந்திருக்கிறேன் ஓகே மோடிஜி மணிப்பூர் கொஞ்சம் போயிட்டு வாங்க அப்புறம் வளர்ச்சி பற்றி நீங்க பேசுவீங்களா நீ அங்க மட்டும் போறதுக்கு மனசு வரமாட்டேங்குது உங்களுக்கு ஒரு வாட்டி போயிட்டு வாங்க நல்ல மனிதரா இந்த கால் புரட்சி எல்லாமே அப்புறம் வளர்ச்சி அடையிதா வீழ்ச்சியான பார்க்கலாம்


vivek
பிப் 25, 2025 16:28

மணிப்பூர் போக முடியாது திராவிட சொம்பு....போய் உன் வேலையை பாரு


N Sasikumar Yadhav
பிப் 25, 2025 16:56

உங்க மானங்கெட்ட திராவிட மாடல் தலைவரை வேங்கைவயலுக்கு செல்ல சொல்லுங்க .


Petchi Muthu
பிப் 25, 2025 15:43

நம்பிக்கை வீண் போகாது... அசாம் வளர்ச்சி பார்த்தால் நிச்சயம் நடக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை