உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜீப் - பைக் மோதல்: உதவி பேராசிரியர் பலி

ஜீப் - பைக் மோதல்: உதவி பேராசிரியர் பலி

பாலக்காடு: பாலக்காடு அருகே, ஜீப் மற்றும் பைக் நேருக்குநேர் மோதி கொண்ட விபத்தில், உதவி பேராசிரியர் உயிரிழந்தார்.கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்தவர் அக் ஷய் மேனன், 35, திருச்சூர் பாம்பாடி அருகே உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில், நேற்று காலை பாலக்காட்டில் இருந்து பைக்கில், கல்லுாரிக்கு சென்றார். அப்போது, லெக்கிடி கூட்டுப்பாதை என்ற இடத்தில், எதிர்நோக்கி வந்த ஜீப் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு, ஒற்றைப்பாலம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஒற்றைப்பாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை