உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உதவி சப் - இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

உதவி சப் - இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கபுர்தாலா:பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் உதவி சப் - இன்ஸ்பெக்டர், துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.பஞ்சாப் மாநில போலீசில் எல்லைப் பாதுகாப்புப் பிரிவில் உதவி சப் - இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் நரிந்தர்ஜித் சிங். கபுர்தாலா மாவட்ட எஸ்.பி., அலுவலகத்துக்கு நேற்று வந்தார். எஸ்.பி., அலுவலகக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ்காரரிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்து தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை, அருகில் உள்ள மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர்.பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதை உறுதி செய்தனர். கபுர்தாலா எஸ்.பி., சரப்ஜித் ராய், சம்பவ இடத்தில் இருந்த போலீஸ்காரர்களிடம் விசாரணை நடத்தினார். நரிந்தர்ஜித் சிங்கின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த சம்பவம் பஞ்சாப் மாநில போலீசாரிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை