உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகாரம் இல்லாமல் கட்சி கொள்கையை அமல்படுத்த முடியாது: சொல்கிறார் கார்கே

அதிகாரம் இல்லாமல் கட்சி கொள்கையை அமல்படுத்த முடியாது: சொல்கிறார் கார்கே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' காங்கிரஸ் கட்சியின் கொள்கை வலுவாக உள்ளது. ஆனால், அதிகாரம் இல்லாமல் அதனை அமல்படுத்த முடியாது,'' என அக்கட்சி தலைவர் கார்கே கூறினார்.மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் கலந்துரையாடலின் போது கார்கே கூறியதாவது: தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு மாநிலங்களில் நீண்ட கால திட்டங்களுடன் பணியாற்ற வேண்டும். கட்சியின் கொள்கை வலுவாக இருக்கிறது. ஆனால், அதிகாரம் இல்லாமல் அதனை அமல்படுத்த முடியாது.அரசியலமைப்பை பாதுகாப்போம் என்று நாம் பிரசாரம் செய்தோம். இதன் மூலம் அரசியலமைப்பை மாற்ற முயற்சித்த பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ரகசிய திட்டத்தை அம்பலப்படுத்தினோம். தேர்தலில் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனக் கூறிய பிரதமர் மோடி, தற்போது நம்முன் தலைவணங்கி உள்ளார்.100 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. கட்சியினர் கடுமையாக உழைத்து இன்னும் 20 முதல் 30 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தால், மத்தியில் மாற்று அரசை அமைத்து இருப்போம்.இதனை நாம் செய்து இருந்தால், ஜனநாயகம், அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி இருக்க முடியும். பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு எதிராக பார்லிமென்டிற்கு உள்ளேயும், வெளியேயும் போராடி வருகிறோம். இந்த போராட்டத்தை வீதிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

கண்ணன்
மார் 28, 2025 12:04

என்ன பெரிய புண்ணாக்குக் கொள்கை? திருடுவதே!


Oviya vijay
மார் 28, 2025 08:16

அடிமையா இருப்பவர்கள் அதிகாரத்தை பற்றி பேசத் தான் முடியும்...உங்க சொத்து பட்டியல் வெள்ளை அறிக்கை யாக வெளியிட வேண்டும். செய்வீர்களா?


visu
மார் 28, 2025 06:47

70 வருடம் ஆட்சில இருந்த கட்சி புதுசா சொல்லுறாங்க அப்ப என்ன பண்ணீங்க இது மற்றவர்களின் நேரம் நீங்க ஒரு 70 வருஷம் சும்மா இருங்க உங்க சான்ஸ் முடிஞ்சுது


naranam
மார் 28, 2025 00:57

இனி வரும் வருடங்களில் எல்லாம் இப்படித்தான் புலம்பி கொண்டிருக்க வேண்டும்.


R.MURALIKRISHNAN
மார் 27, 2025 22:49

பார்த்து ப்ரோ, ஏற்கனவே நீங்க வீதிக்கு வந்துட்டீங்கங்கறத ஞாபகத்தில் வச்சுக்கோங்க. ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சியை அடகு வைத்துவிட்டு பின்ன எப்படி அதிகாரத்தில் வருவது. வேணும்னா ஆயுசு முடியறவரை பார்லிமென்ட் கேன்டீனை உபயோகித்து கொள்ளலாம்


தாமரை மலர்கிறது
மார் 27, 2025 22:45

காங்கிரஸ் கொள்கை என்பது தாய்லாந்துக்கு டூர் சென்று மசாஜ் போவது தானே. இதை அமுல்படுத்த, அதிகாரம் எதற்கு? துட்டு இருந்தால் போதுமே.


Ramesh Sargam
மார் 27, 2025 22:39

பல ஆண்டுகள் காங்கிரஸ் அதிகாரத்தில் இருந்தபோது உங்கள் கொள்கையை ஏன் நீங்கள் அமல்படுத்தவில்லை? அப்பொழுது அதிகாரம் இருந்தது. ஆனால் கொள்கை இல்லை. அதுதானே…??