ஹிமாச்சல்லில் பஸ் கவிழ்ந்து 19 பேர் உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்
ஷிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி பஸ் கவிழ்ந்த விபத்தில் 19 பே ர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். பொதுச் சொத்துகளுக்கும், அரசுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lzazndd9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், ஹிமாச்சல பிரதேசத்தில் பிலாஸ்பூர் மலைப்பகுதியில் 30 பேருடன் பஸ் சென்று கொண்டு இருந்தபோது அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சகதியுடன் பாறைகளும் சரிந்தன. இதில் சிக்கிய பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர். குழந்தை உட்பட 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. பஸ்சில் இருந்து இன்னும் சிலர் மீட்கப்பட வேண்டி உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.தலைவர்கள் இரங்கல்
ஜனாதிபதி திரவுபதி முர்முஹிமாச்சலில் ஏற்பட்ட பஸ் வவிபத்தில் உயிரிழந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்.பிரதமர் மோடி இரங்கல்பஸ் கவிழ்ந்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஹிமாச்சலில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு குறித்து அறிந்து கவலையடைந்தேன். இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தின் நினைவாக எனது எண்ணங்கள் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் எனக்கூறியுள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாபஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறித்து அறிந்து கவலையடைந்தேன். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது இரங்கல்.இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவராணமும், அறிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் குணமடையவும் பிராத்திப்பதாக தெரிவித்துள்ளார்.