உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கலபுரகி சிறையில் ஏ.டி.ஜி.பி., ஆய்வு 

கலபுரகி சிறையில் ஏ.டி.ஜி.பி., ஆய்வு 

கலபுரகி : கலபுரகி மத்திய சிறையில் உள்ள கைதிகளான விஷால், சாகர், சோனு ஆகியோர் கஞ்சா புகைத்தபடி, நண்பர்களுடன் வாட்ஸாப் வீடியோ கால் பேசும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சிறை துறை கூடுதல் டி.ஜி.பி., மாலினி கிருஷ்ணமூர்த்தி, கலபுரகி சிறைக்கு நேற்று சென்றார். கைதிகள் அறைக்கு சென்று ஆய்வு நடத்தினார். பின் அவர் அளித்த பேட்டியில், ''முதற்கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளோம். அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறையில் தற்போது 2ஜி ஜாமர் தான் உள்ளது. விரைவில் 5ஜி ஜாமர் பொருத்தப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி