உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசின் மீதான தாக்குதல்

அரசின் மீதான தாக்குதல்

ஜம்மு- -- காஷ்மீரின் பஹல்காமில், அப்பாவி சுற்றுலா பயணியர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் வேதனை அளிக்கிறது. இது, அரசின் மீதான நேரடி தாக்குதல். இந்த கோழைத்தனமான பயங்கரவாதச் செயலையும், அதற்கு பொறுப்பானவர்களையும் காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது.மல்லிகார்ஜுன கார்கேதலைவர், காங்கிரஸ்

மன்னிப்பு கோருகிறோம்

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, காஷ்மீரிகளான நாங்கள் வெட்கப்படுகிறோம். அதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம். இத்தகைய செயல்களை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களை விரைவில் தண்டிக்க வேண்டும்.மெஹபூபா முப்திதலைவர், மக்கள் ஜனநாயக கட்சி

சுற்றுலா துறையில் கவனம்

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் நாடே வேதனையில் உள்ளது. காஷ்மீரில் பிரிவினைவாதத்தையும், பயங்கரவாதத்தையும் மீண்டும் துாண்ட சிலர் முயற்சித்துள்ளனர். சுற்றுலா துறைக்கு இதனால் ஏற்படும் பாதிப்பை குறைக்க, மத்திய சுற்றுலா அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும்.கஜேந்திர சிங் ஷெகாவத்மத்திய சுற்றுலா துறை அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

V.Ravichandran
ஏப் 24, 2025 11:08

நம்ப முடியிலேயே , இதுவா பேசுது, எதோ உள்குத்து இருக்கு , காங்கிரஸுக்கு நாட்டுப்பற்று என்றால் என்னவென்றே தெரியாதே .


VENKATASUBRAMANIAN
ஏப் 24, 2025 08:33

இந்த காங்கிரஸ் விசிக இதை வைத்து அரசியல் செய்கிறார்கள். மனிதாபிமானமே இல்லாத ஜென்மங்கள். பதவி ஒன்றே குறிக்கோளாக செயல்படும் இவர்களை ஒதுக்க வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கிறார். ஆனால் ஜால்ரா அடிக்கும் திருமா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை