உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிந்துக்கள் மீதான தாக்குதலையும், கிரிக்கெட்டையும் தொடர்புபடுத்தக்கூடாது: ஷாருக்கானுக்கு சசி தரூர் ஆதரவு

ஹிந்துக்கள் மீதான தாக்குதலையும், கிரிக்கெட்டையும் தொடர்புபடுத்தக்கூடாது: ஷாருக்கானுக்கு சசி தரூர் ஆதரவு

திருவனந்தபுரம்: '' வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடக்கும் தாக்குதலையும், கிரிக்கெட்டையும் தொடர்புபடுத்தக்கூடாது,'' என காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறியுள்ளார்.வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை , ஷாருக்கானின் கோல்கட்டா அணி ஏலத்தில் எடுத்ததற்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும்,காங்கிரஸ் எம்பியுமான சசிதரூர் கூறியதாவது: வங்கதேசத்தில் நடக்கும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் சம்பவத்தை கிரிக்கெட் உடன் தொடர்புபடுத்தக்கூடாது. சில விஷயங்களை தொடர்புபடுத்துவதை தவிர்க்க வேண்டும். சிறுபான்மையினரைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் சரியானதைச் செய்யுமாறு வங்கதேசத்தை வலியுறுத்துகிறோம். இது தொடர வேண்டும். முஸ்தாபிசுர் ரஹ்மான் ஒரு கிரிக்கெட் வீரர். வஙகதேசத்தில் நடப்பதற்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் மீது தனிப்பட்ட முறையில் எந்த வெறுப்புப் பேச்சு அல்லது தாக்குதல்களையும் ஊக்குவித்ததாகவோ அல்லது ஆதரித்ததாகவோ குற்றம் சாட்டப்படவில்லை. எனவே இரண்டையும் கலப்பது நியாயம் இல்லை. நமது அண்டை நாடுகள் அனைத்தையும் தனிமைப்படுத்தும் நாடாக நாம் மாறினால், அவர்களில் எவருடனும் யாரும் விளையாட முடியாது. பிறகு எப்படி நன்மை பயக்கும். இது முற்றிலும் விளையாட்டு முடிவு. இதில் அரசியல் வர அனுமதிக்கக்கூடாது. நாம் மூன்று பக்கங்களிலும் வங்கதேசத்தை சூழ்ந்துள்ளோம். அவர்களை தனிமைப்படுத்த முடியாது. அவர்களுடன் விளையாட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

சத்யநாராயணன்
ஜன 03, 2026 14:54

ஆழ்ந்த ஆராயாமல் மேலோட்டமாக பொதுவாக யாரும் கருத்து கூறவில்லை கண்டிப்பாக அந்த பங்களாதேஷ் முஸ்லிம் கிரிக்கெட் வீரனுக்கு கொடுக்கப்பட்ட பணம் தீவிரவாதத்திற்கும் பங்களாதேஷின் சிறுபான்மையினரை அழித்து ஒழிப்பதற்கும் தான் பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை


தத்வமசி
ஜன 03, 2026 13:16

இந்துக்களை தாக்கி கொன்றதற்கு ஏதாவது விரலையாவது இவர்கள் அசைத்தார்களா ? எல்லாம் ஓட்டு வங்கி அரசியல். இதைத் தான் காங்கிரஸ் சுதந்திரத்திற்கு முன்னும் பிறகும் செய்து வருகிறது.


duruvasar
ஜன 03, 2026 11:40

சரிங்க இந்தியாயவை பற்றி பாகிஸ்தான் கிரிக்கட் வீரர்கள் மோசமான கருத்து சொல்கிறார்களே ? ஏட்டிக்கு போட்டி என்று வைத்துக்கொள்ளவிட்டா லும் சாதாரண மக்களுக்கு வரும் இயல்பான கோவத்தின் வெளிப்பாடுதான். ஹிந்துக்கள் கொல்லப்படுவதை குறித்து ஷாருக் கான் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை. நியாயம் பொதுவாக இருக்கவேண்டும்.


Santhakumar Srinivasalu
ஜன 03, 2026 10:50

ஷாருக் செயலை ஆதரிப்பதன் மூலம் வங்க தேச ஹிந்துக்கள் மீது தாக்குதலை சசி ஆதரிக்கிறாரா?


rengarajan
ஜன 03, 2026 09:45

முதலில் உன் பெண்டாடியை எப்படி மதிக்க வேண்டும் என்று தெரிந்து அப்புறம் ஊருக்கு அட்வைஸ் பண்ணு.


S.V.Srinivasan
ஜன 03, 2026 09:41

சரி, ஆனா இங்க இருக்கிற மதச்சார்பின்மை கட்சி ஆளுங்க ஒருத்தரு கூட பங்களாதேஷில் ஹிந்துக்கள் மீது நடக்கும் காட்டுமிராண்டி தாக்குதலுக்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லையே.


அப்பாவி
ஜன 03, 2026 06:45

அடி உதை வேறே.. காசு, துட்டு வேறே. இதெல்லாம் சம்பந்தப் படுத்தக் கூடாது.


N Sasikumar Yadhav
ஜன 03, 2026 04:07

ஷாருக்கான் உட்பட இஸ்லாமியர் பெரும்பாலோனோருக்கு தேசப்பற்றை விட மதவெறி தான் அதிகமாக இருக்கிறது . தேசம் பாதுகாப்பாக இருந்தால்பட்டுமே நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்போம்


spr
ஜன 03, 2026 01:44

"நமது அண்டை நாடுகள் அனைத்தையும் தனிமைப்படுத்தும் நாடாக நாம் மாறினால், அவர்களில் எவருடனும் யாரும் விளையாட முடியாது. பிறகு எப்படி நன்மை பயக்கும். இது முற்றிலும் விளையாட்டு முடிவு. இதில் அரசியல் வர அனுமதிக்கக்கூடாது." தர்க்க ரீதியாக இது சரியே ஆயினும் அந்த விளையாட்டு வீரர் பணம் படைத்த பிறிதொரு மனிதர் தன்னையொரு பந்தயக் குதிரை போல ஏலத்தில் எடுக்க அனுமதிக்கிறார் என்பது அவமானம் என்று அவர் நினைக்க வேண்டும். ஆனால், இதில் முதலீடு செய்யப்படுவது பெரும்பாலும் கறுப்புப் பணமாக இருக்க வாய்ப்புள்ளதாலும் செயல்பாட்டில் இதுவொரு சூதாட்டம் என்பதாலும் கண்கணிக்கப்பட வேண்டியது என்பதோடு அவசியமானால் தடுக்கப்பட வேண்டிய ஒன்றுமாகும்


Senthoora
ஜன 03, 2026 05:07

தன்னை ஒருவர் பாதையை குதிரைபோல ஏலத்தில் எடுக்கிறார்கள் என்றால் IPL அல்ல உலகில் இருக்கும் முக்கிய விளையாட்டுகள் கிரிக்கெட், உதைபந்தாட்டம், கூடை பந்து விளையாட்டு போட்டிகளை தடை செய்யப்படணும். இதுஇல் பாதிக்கப்படுவது ரசிகர்களே போட்டி, பணம் போன்றவற்றால்


Kumar Kumzi
ஜன 03, 2026 01:40

ஓட்டு பிச்சைக்காக காட்டுமிராண்டிகளுக்கு முட்டு குடுத்தால் பப்பூகானின் நிலைமை தான் ஏற்படும்


முக்கிய வீடியோ