உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வர்த்தக கப்பல்கள், மாலுமிகள் மீதான தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது; மத்திய அரசு கண்டனம்

வர்த்தக கப்பல்கள், மாலுமிகள் மீதான தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது; மத்திய அரசு கண்டனம்

டில்லியில் நடந்த ஐஓஆர்ஏ கூட்டமைப்பின் 23 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.அவர் பேசியதாவது: சர்வதேச சட்டங்களை மதிக்க வேண்டும். வர்த்தக கப்பல்கள், மாலுமிகள் மீதான தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு உலகளாவிய பதில் நடவடிக்கை தேவை. புவிசார் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தை உறுதி செய்ய உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கப்பல்கள் மீதான தாக்குதல்கள், பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தல் ஆகியவற்றைத் தடுக்க சர்வதேச அளவிலான கூட்டு நடவடிக்கை அவசியம். இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை