உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி: நயினார் நாகேந்திரன் பேட்டி

ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி: நயினார் நாகேந்திரன் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: ''ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு பொதுமனிதர். நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக சிந்தனை செய்யக் கூடிய ஒரு தேசியவாதி'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.வரும் ஜூன் 8ம் தேதி மதுரை ஒத்தக்கடையில் உள்ள வேலம்மாள் திடலில் தமிழக பா.ஜ.,வின் அமைப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s7aowxtp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கான பூமி பூஜை மற்றும் முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி இன்று நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலினை விட்டு தமிழகம் அவுட் ஆப் கன்ட்ரோலில் போய்விட்டது. தமிழகம் சட்டம் ஒழுங்கில் அவுட் ஆப் கன்ட்ரோலில் போய்விட்டது. தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி செய்ய வேண்டும். ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு பொதுமனிதர். நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக சிந்தனை செய்யக் கூடிய ஒரு தேசியவாதி. அவர் நல்ல விஷயங்களில் தலையீடுவது நல்லது தான். அமித்ஷா - அன்புமணி சந்திப்பு குறித்து இதுவரை திட்டம் இல்லை. ராமதாஸ் - அன்புமணி பேச்சுவார்த்தையில் எங்களுக்கு சம்பந்தம் இல்லை. தே.மு.தி.க.,வும் எங்கள் கூட்டணியில் இணையும் என நம்பிக்கை உண்டு. மதுரையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணி கட்சியினர் பங்கேற்க மாட்டார்கள். தி.மு.க.,விற்கு ஷா என்றாலே பயம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Varuvel Devadas
ஜூன் 07, 2025 12:22

It may be, but it seems like no brain at all.


EZ Bala
ஜூன் 06, 2025 21:36

நம்பிட்டோம் அய்யா


C.R SELVA
ஜூன் 06, 2025 20:46

எங்க தெருவுல கூட ரெண்டு பஞ்சாயத்து இருக்கு, சார், வருவீங்களா?


Rajkumar
ஜூன் 06, 2025 19:16

ஐயா அறிவாளியாக பேசுவதாக நினைத்து மக்களை ஏமாளி ஆக்க நினைக்காதீர்கள். இது போல் செய்வதை நிறுத்தினாலே கட்சி நன்றாக வளரும். எப்ப தான் நீங்கள் திருந்தி கட்சியை வளர்க்க போகிறீர்களா.


NARAYANAN
ஜூன் 06, 2025 17:29

ஐயா மக்களை சந்தித்து,அவர்களை நம்பி அரசியல் செய்யுங்கள் .தனி மனிதரை நம்பினால் கட்சி கண்டிப்பாக வளராது.நீங்கள் வளரலாம்.தூதுவர் மேலும் வளரலாம்.தடத்தை மாற்றி,தடம் புரள செய்யாதீர்கள் ,


தியாகு
ஜூன் 06, 2025 16:42

குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி, நல்லவர், வல்லவர், ஒன்றும் தெரியாத அப்பாவி. ஹி...ஹி...ஹி...


venugopal s
ஜூன் 06, 2025 15:15

பசுத்தோல் போர்த்திய புலி என்றும் சொல்லலாமே!


Murugesan
ஜூன் 06, 2025 15:12

குருமூர்த்தி புகுந்த வீடு ,அதிமுக நயவஞ்சக கைக்கூலி ,தமிழக பாஜகவை நடுத்தெருவில் நிறுத்திய அள்ளக்கைகள் ,அண்ணாமலை நல்லவராக இருந்ததால் இந்த அயோக்கியர்களிடம் இருந்து விலக காரணம். பாஜக ஒரு சீட்டு கூட வெற்றிபெற வாய்ப்பில்லை, நோட்டாதான்


N S Sankaran
ஜூன் 06, 2025 14:55

சுருக்கமாக சொன்னால் political புரோக்கர். சோ ஆரம்பித்த மகத்தான பத்திரிகை இவர் கைக்கு சென்றது துரதிருஷ்டம்.


முருகன்
ஜூன் 06, 2025 14:38

இவர்கள் கூட்டணிக்கு உதவினால் அதற்கு பெயர் தேசியவாதி குடும்ப கட்சி என திமுகவை விமர்சிக்கும் இவர்கள் அன்புமணி ராமதாஸ் என்ற இருவரை இனைக்க சொல்வது வேடிக்கை ஆகும்


Amar Akbar Antony
ஜூன் 06, 2025 16:15

கொஞ்சம் திரும்பி பாப்போமா? தி மு க வை ஆரம்பித்தது யார்? அந்த கட்சியை ஆட்டைய போட்டது யார்? அது பொதுக்கட்சியாக இருந்ததை குடும்பக்கட்சியாக மாற்றியது யார்? தி மு க தீய மு க வாக மாறியது யாரால்? அதே சமயம் பா மா க வை தோற்றுவித்தது அவர் குடும்பம். இதனால் பெரிய குழப்பங்கள் இல்லை. அதாவது ஒரு பப்ளிக் கம்பெனியை ஒரு சாதாரண அலுவலர் திருடி மிரட்டி குழப்பத்தை உருவாக்கி ரௌடிசம் செய்து பொதுச்சொத்தை ஆட்டைய போட்டாரென்றால் என்ன சொல்வீர்களோ அதே தான் தி மு க. புரிந்தால் சரி.


துர்வேஷ் சகாதேவன்
ஜூன் 06, 2025 22:02

உண்மை வலிக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை