உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கார் மீது ஆட்டோ மோதல் சாலையில் டிராவிட் சண்டை

கார் மீது ஆட்டோ மோதல் சாலையில் டிராவிட் சண்டை

பெங்களூரு,: கர்நாடகாவின் பெங்களூரில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், ஆட்டோ டிரைவருடன் சாலையில் வாக்குவாதத்தில் ஈடுபடும் 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியாகிஉள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாகவும், இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்தவர் ராகுல் டிராவிட், 52. இவர், கர்நாடகாவின் பெங்களூரில் வசித்து வருகிறார். அங்குள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் சர்க்கிளில் இருந்து மில்லர்ஸ் ரோடு நோக்கி நேற்று முன்தினம் மாலை காரில் சென்றார். அப்போது, அவரது கார் மீது ஆட்டோ ஒன்று மோதியது. இதில் கார் சேதமடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த டிராவிட், காரில் இருந்து இறங்கி வந்து, ஆட்டோ டிரைவருடன் கன்னடத்தில் வாக்குவாதம் செய்தார். 'ஏன் பிரேக் பிடிக்காமல் காரில் மோதினாய்?' என, ஆட்டோ டிரைவரிடம் டிராவிட் கோபத்துடன் கேட்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.டிராவிட்டை பார்த்ததும் முதலில் இன்ப அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர், பின்னர் சரிக்கு சமமாக வாக்குவாதம் செய்தார். கார் மீது மோதிய ஆட்டோ டிரைவர் மீது, டிராவிட் போலீசில் புகார் அளிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

c.k.sundar rao
பிப் 06, 2025 10:08

Auto drivers in Bangalore and in other cities in Karnataka, majority of them belongs to minority group and they are well organised politically and groupwise, they are supported by their political masters in ruling or opposition, hence they behave unruly.


பெரிய குத்தூசி
பிப் 06, 2025 08:38

காரை நேசிக்கும் ஒவொருவருக்கும் நமது காரை ஒருவர் சேதப்படுத்தும் தான் அந்த வலி தெரியும், இதில் திராவிட் விதிவிலக்கல்ல. ரோட்டல நிறைய idiot இருகாங்க. டிரைவர் லைசென்ஸ் வெச்சிக்கிட்டு டிரைவர் னு பண்ற லூட்ட தாங்கமுடியால. ஆட்டோ காரன் எல்லாமே நல்ல கார இருந்தா இடம் நிறைய இருந்தாலும் வேணும்னு காரை உரசி சேதப்படுத்தி நிப்பானுக. எனக்கு ரெண்டு மூணு வாட்டி சென்னை ல நடந்து இருக்கு. ஆட்டோ காரன்கிட்ட சேதத்துக்கு பைசா வாங்கமுடியாது. ரெண்டு மிதி, போலீஸ் கேஸ் ஆனா 5கே போலீஸ் க்கு குடுத்து போலீஸ் காரன் கையாலே ஆட்டோ டிரைவர் ரா நாலுசத்து, இதுதான் ஒரே சொலுஷன்


நிக்கோல்தாம்சன்
பிப் 06, 2025 04:12

பெங்களூரில் ஆட்டோவினர் செய்யும் அட்டூழியங்களுக்கு யாரும் தப்ப முடியாது


முக்கிய வீடியோ