உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  லடாக்கில் பனிச்சரிவு ஏழு பேர் பலி

 லடாக்கில் பனிச்சரிவு ஏழு பேர் பலி

லடாக்: லடாக்கில் -----ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஏழு பேர் பலியாகினர் . லடாக்கின் சோஜிலா கணவாய், ஸ்ரீநகர் - லே நெடுஞ்சாலையான என். எச்., - 1ல் அமைந்துள்ளது. இங்குள்ள ஜீரோ பாயின்ட் மற்றும் மினிமார்க் இடையேயான பகுதிகளில் நேற்று மதியம் அடுத்தடுத்து பனிச்சரிவுகள் ஏற்பட்டது. இதில் சிக்கி, 10க்கும் மேற்பட்ட கார்கள் புதைந்ததில், ஏழு பேர் பலியாகினர்; ஐந்து பேர் காயமடைந்தனர். மீட்பு படையினர் உடனடியாக பனி குவியலில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பனிச்சரிவு காரணமாக -ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !