உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆன்டிபயாடிக் மருந்துகளை தவிருங்கள்; டாக்டர்கள் ஆலோசனையின்றி பயன்படுத்தாதீங்க!

ஆன்டிபயாடிக் மருந்துகளை தவிருங்கள்; டாக்டர்கள் ஆலோசனையின்றி பயன்படுத்தாதீங்க!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

'ஆன்டிபயாடிக்' மருந்துகள் குறித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அறிக்கையை மேற்கொள் காட்டி, ''டாக்டர்கள் ஆலோசனையின்றி மருந்துகளை பயன்படுத்த கூடாது'' என மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், நிமோனியா மற்றும் சிறுநீர் பாதை நோய்த் தொற்றுகளுக்கு எதிராக ஆன்டிபயாடிக் எதிர்ப்பு மருந்துகள் பயனற்றவை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிக்கையை மேற்கொள் காட்டினார். மேலும், அவர் பேசியதாவது: ஐசிஎம்ஆர் அறிக்கை அனைவரையும் கவலை அடைய செய்கிறது. எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கு கண்மூடித்தனமாக ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்வது முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த மாத்திரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் என்ற நம்பிக்கை நோய் தொற்று பாதிப்பை அதிகரிக்க செய்கிறது. சுயமாக மாத்திரைகள் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக ஆன்டிபயாடிக் மருந்துகளை தவிர்க்க வேண்டும். அத்தகைய மாத்திரைகளை எடுத்து கொள்வதற்கு முன்பு டாக்டர்களை அணுக வேண்டும். மருந்துக்கள் பயன்பாட்டில் அதிக விழிப்புணர்வுகள் மிக முக்கியம். டாக்டர்கள் ஆலோசனையைப் பின்பற்றுவது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும் பிரதமர் மோடி பேசினார்.

சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை!

இந்தியாவின் மிகவும் கடுமையான பொது சுகாதார சவால்களில் ஒன்றாக 'ஆன்டிபயாடிக்' மருந்துகள் உருவாகி வருவதாக சுகாதார நிபுணர்கள் பலமுறை எச்சரித்துள்ளனர். ஆண்டிபயாடிக் மருந்துக்கள் பயன்பாடு, பெரும்பாலும் டாக்டர் சீட்டுகள் இல்லாமல் மருந்துகளை பயன்படுத்து தொற்று பாதிப்பை வழக்கான முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்துவது விட கடினமான சூழலை உருவாக்கி விடும். இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது: உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்களில் ஒன்றாக ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்துவது மாறியுள்ளது. நோய் தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்துவதை தடுக்க அவசர நடவடிக்கை தேவை. இல்லையென்றால் 2050ம் ஆண்டுக்குள் உலகளாவிய இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உருவெடுத்துவிடும். இவ்வாறு டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Roy
டிச 29, 2025 13:49

go to a government hospital or primary health centre and complain of nasal discharge or cold, they will blindly prescribe antibiotics


arumugam mathavan
டிச 29, 2025 13:29

மாநில மத்திய சுகாதார அலுவலர்கள் ஏன் எந்த விழிப்புணர்வு முகாம்கள், பத்திரிக்கை விளம்பரங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள் செய்யவில்லை... எல்லாம் முடிந்த பின்னாடியே...


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 29, 2025 12:16

ஆண்டிபையாட்டிக் மருந்துகளை முன்பெல்லாம் டாக்டர்கள் மிகவும் சாதாரணமாக ப்ரிஸ்க்ரைப் செய்வார்கள்.... அவற்றை அறிமுகப்படுத்தியதே அலோபதி மருத்துவம்தான்... இன்று அதே மருத்துவம் சொல்கிறது கூடுமானவரை அவற்றைத் தவிர்க்க ....


அசோகன்
டிச 29, 2025 12:07

உண்மை எனக்கு தெரிந்த ஒருவர் சிறுநீரக கோளாறு வராமலிருக்க ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை தொடர்ந்து சாப்பிடத்தால் இப்போது அவரின் சிறுநீரகங்கள் செயலிலந்து உள்ளது.... இதை மருத்துவரே சொல்லி கண்டித்தார்


RAMAKRISHNAN NATESAN
டிச 29, 2025 14:33

சிறுநீரக கோளாறைத் தவிர்க்க அல்ல .... சிறுநீர்ப்பாதைத் தொற்று இருப்பதாக அவரே கருதி தேவையின்றி ஆன்டிபயாடிக் எடுத்திருப்பார் .... ஆனால் ஓரிரு முறை அப்படிச் செய்ததனாலேயே சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுவிடாது .... மாறாக சிறுநீரக செயலிழப்புக்குப் பல காரணங்கள் உள்ளன .... நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புகைபிடித்தல் என காரணங்கள் ..... பட்டியலே சொல்லலாம் ...


புதிய வீடியோ