வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஒரே நேஷன். ஒரே ஆளு. ஒரே மெடல்.
அவரவருக்குத் தெரிந்ததைத் தானே பேச முடியும்!
புதுடில்லி: தேவையற்ற அறிக்கைகளைத் தவிர்க்குமாறு டில்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடனான சந்திப்பில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று (மே 25) தேசிய ஜனநாய கூட்டணி முதல்வர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாய கூட்டணியில் இடம்பெற்றுள்ள 20 மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். அதேபோல், 18 மாநில துணை முதல்வர்களும் பங்கேற்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d1w7doif&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதேபோல், மத்திய அமைச்சர்கள் நட்டா, ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஆதரவாகவும், ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு ஆதரவாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அதேபோல், நக்சலைட்டுகளை ஒழிக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் தேவையற்ற அறிக்கைகளைத் தவிர்க்க வேண்டும். அநாகரிகமான கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.எங்கும் எதையும் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். மூன்றாம் தரப்பினரின் பேச்சைக் கேட்டு பாகிஸ்தானுடன் போரை நிறுத்தவில்லை. பாகிஸ்தானின் வேண்டுகோளைத் தொடர்ந்து போர் நிறுத்தத்திற்கான முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பா.ஜ., தலைவர்கள் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தொடர்ந்து இந்த ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு முக்கிய அறிவுரைகளை பிரதமர் மோடி வழங்கி உள்ளார் என டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ஒரே நேஷன். ஒரே ஆளு. ஒரே மெடல்.
அவரவருக்குத் தெரிந்ததைத் தானே பேச முடியும்!