உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எண்ணெய் உணவுக்கு நோ: பள்ளிகளில் விழிப்புணர்வு

எண்ணெய் உணவுக்கு நோ: பள்ளிகளில் விழிப்புணர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உணவில் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.நம் நாட்டில் நகர்ப்புற குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே உடல் பருமன் அதிகரித்து வருகிறது. ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவதும், சர்க்கரை மற்றும் எண்ணெய் உடைய தின்பண்டங்களை அதிகம் எடுத்துக் கொள்வதும் இதற்கு காரணம். நாட்டில், 20 சதவீதத்துக்கும் அதிகமான இளைஞர்கள் உடல் பருமனால் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது. எண்ணெய் மற்றும் சர்க்கரை பயன்பாட்டை குறைக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடியும் அவ்வப்போது வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே எண்ணெய் பயன்பாட்டின் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது. இதற்காக, 'எண்ணெய் போர்டு' என்ற பலகையை அமைக்கும்படி, அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.முன்னதாக, சர்க்கரை பயன்பாட்டை குறைக்க, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 'சர்க்கரை பலகை' நிறுவப்பட்ட நிலையில், தற்போது எண்ணெய் நுகர்வை குறைக்க இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் பலகை என்றால் என்ன?

சி.பி.எஸ்.இ., உத்தரவுப்படி, பள்ளி வளாகங்களில் உள்ள கேன்டீன்கள், நடைபாதைகள், ஆசிரியர்களின் ஓய்வறைகளில், எண்ணெய் பலகைகள் நிறுவப்பட வேண்டும். இது, பெரிய போஸ்டராகவோ அல்லது டிஜிட்டல் திரையாகவோ இருக்கலாம். அதில், அதிக கொழுப்பு மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்த எச்சரிக்கைகள் இடம்பெறும். மாணவர்கள், ஆசிரியர்களிடையே எண்ணெய் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
ஜூலை 18, 2025 11:18

நல்லா சாப்புட்டாதான் 60, 65 இஞ்ச் வரும்.


தாமரை மலர்கிறது
ஜூலை 18, 2025 02:19

விழிப்புணர்வு, எச்சரிக்கை என்று எதையும் இந்தியர்கள் கேட்கமாட்டார்கள். எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் பேராசை கொண்டு சிட் பண்டில், ஆப்ஷன் ஷேர் மார்க்கெட் இல் முதலீடு செய்வார்கள். பிடித்த ஹீரோவுக்காக பாலாபிஷேகம் செய்ய நூறடி கட் அவுட் வைத்து கீழே விழுந்து சாவார்கள். பைக்கில் வேகமாக சென்று தான் மட்டுமின்றி மற்றவர்களையும் விபத்துக்குள்ளாக்குவார்கள். குடித்துவிட்டு கார் ஒட்டி மற்றவர்களின் உயிரையும் எடுப்பார்கள். நீச்சல் தெரியாமல் லைப் ஜாக்கெட் இன்றி படகில் ஏறுவார்கள். பணமின்றி இருக்கும்போது ஊதாரித்தனமாக பந்தாவிற்காக விமர்சையாக பிறந்தநாள் கொண்டாடுவார்கள். செலஃபீ எடுக்கிறேன் செத்த இந்தியர்கள் உலகிலேயே அதிகம். எவ்வளவு ஊழல் செய்தாலும் திரும்ப திரும்ப திமுகவிற்கு ஓட்டுபோடுவார்கள். பேசாமல் ஷுகர் மற்றும் எண்ணெய் பொருள்களுக்கு நூறு சதவீத வரி போடுங்கள். சூடுபோட்டால் தான் மக்கள் திருந்துவார்கள்.


தென்காசி ராஜா ராஜா
ஜூலை 18, 2025 08:43

தஞ்சை தாமரை முத்து முத்தாக அருமையான கருத்து பதிவு


பிரேம்ஜி
ஜூலை 18, 2025 11:21

உண்மை! இந்தியர்கள் மிகவும் யோக்கியர்கள்! தான் இறக்க நேர்ந்தாலும் சுதந்திரமாகவே இருக்க விரும்புவார்கள்! பாதுகாப்பு கடைபிடித்து வாழ்பவர்கள் பயந்தாங்கொள்ளி என்ற மாறாத மாற்ற முடியாத கொள்கைப் பிடிப்பு கொண்டவர்கள்! ஜெய் பாரத்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை