உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தி ராமர் கோவிலுக்கு ஓராண்டில் ரூ.327 கோடி வருவாய்

அயோத்தி ராமர் கோவிலுக்கு ஓராண்டில் ரூ.327 கோடி வருவாய்

அயோத்தி : உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோவில், கடந்த நிதியாண்டில் 327 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளது. இதையடுத்து, நம் நாட்டில் உள்ள பணக்கார கோவில்களின் வரிசையில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. உ.பி.,யின் அயோத்தியில், ஸ்ரீ ராமஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜனவரியில் நடந்த விழாவில், பால ராமர் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப் பட்டது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் பால ராமரை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், 2024 - 25ம் நிதியாண்டில் மட்டும், அயோத்தி ராமர் கோவில் 327.07 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இதில், நன்கொடையாக மட்டும் 157 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. உண்டியல் வருவாய், வங்கியில் செலுத்தப்பட்ட தொகைக்கு கிடைத்த வட்டி உள்ளிட்டவை இதில் அடங்கும். இதையடுத்து, நாட்டில் அதிக வருவாய் ஈட்டும் கோவில்களின் பட்டியலில் அயோத்தி ராமர் கோவில் இடம்பெற்றுள்ளது.இது குறித்து ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளையைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ராமர் கோவிலுக்கு நாள்தோறும் 70,000 - 80,000 பக்தர்கள் வருகின்றனர். திருவிழா காலங்களில், இது மூன்று மடங்காக உயரும். நடப்பு நிதியாண்டில், கடந்த மாதம் வரை, 104.96 கோடி ரூபாய் ராமர் கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது. இதில், 31.22 கோடி ரூபாய் நன்கொடையாகவும், 20.86 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாகவும் கிடைத்துள்ளது. வருடாந்திர வருவாய் அடிப்படையில், நம் நாட்டில் உள்ள பணக்கார கோவில்களில் அயோத்தி ராமர் கோவில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Palanisamy T
செப் 23, 2025 04:49

நல்லவேளை இந்த கோவிலை தமிழகத்தில் கட்டவில்லை. கட்டியிருந்தாள் யாருக்கோ லாபம்


Kasimani Baskaran
செப் 23, 2025 03:54

பகவான் இராமனின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.


Ramesh Sargam
செப் 23, 2025 01:47

ஜெய் ஸ்ரீ ராம். அந்தக்கோவில் மட்டும் தமிழ் நாட்டில் இருந்திருந்தால், ரூ. 327 கோடியை, ரூ. 3.27 கோடி என்று கணக்கு காட்டி, மிச்சமுள்ளதை ஆட்டை போட்டிருக்கும் திமுக அரசு. ஜெய் ஸ்ரீ ராம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை