உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தி ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை: பக்தர்கள் நெகிழ்ச்சி

அயோத்தி ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை: பக்தர்கள் நெகிழ்ச்சி

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை செய்யும் விழா கோலாகலமாக நடைபெற்றது.உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ள ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை எனப்படும் புனித நிகழ்வு நடந்தது. கர்ப்ப கிரகத்தில் பால ராமர் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதன் கண்களை மூடியுள்ள திரை அகற்றப்பட்டு, விக்ரஹம் உயிர்ப்பு பெறும் உச்சக்கட்ட சம்பிரதாயம் இது. இதற்காக அயோத்தி நகர் முழுவதும் காவி கொடியுடன், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.இந்த நிகழ்ச்சியில் பா.ஜ., தலைவர்கள், முதல்வர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இஸ்ரோ தலைவர் சோம்நாத், ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்களான ரஜினிகாந்த், தனுஷ், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், சிரஞ்சீவி, கங்கனா ரணவத், மாதுரி தீட்சித், கத்ரீனா கைப், ரன்பீர் கபூர், ஆலியா பட், ஜாக்கி ஷெராப், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின், அனில் கும்ளே உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். அதேபோல், துறவியர், மடாதிபதிகள், சாதுக்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.கோவில் கருவறைக்குள் நடந்த சங்கல்ப் பூஜையில் பிரதமர் மோடி, மோகன் பகவத், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டனர். சங்கல்ப் பூஜையுடன் பிராண பிரதிஷ்டை எனப்படும் புனித நிகழ்வு நடைபெற்றது. இன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைக்கு எதிரே 75 ஆண்டு பழமையான சிலையும் வைக்கப்பட்டுள்ளது.ஐந்து நூற்றாண்டு இடைவெளிக்கு பின்னர் ராமர் தன் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டார் என்பதை பிரகடனம் செய்யும் இந்த வரலாற்று நிகழ்வை நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாடினர். பக்தர்கள் பரவசத்துடன் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பி மகிழ்ந்தனர். ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு அயோத்தி நகர் விழாக்கோலம் பூண்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s9ncib4d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

விரதம் நிறைவு

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்ததை முன்னிட்டு 11 நாட்களாக தான் கடைப்பிடித்த அனுஷ்தானா விரதத்தை தீர்த்தம் குடித்து நிறைவு செய்தார் பிரதமர் மோடி.

நினைவுப்பரிசு

பிரதமர் மோடிக்கு ராமர் கோயில் வடிவிலான சிலையை நினைவு பரிசாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்கினார்.

நாளை முதல் தரிசிக்கலாம்

பிராண பிரதிஷ்டைக்கு பின் நாளை (ஜன.,23) ராம் லல்லாவின் (பால ராமர்) தரிசனம் தொடங்கும் என ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறினார். இதனையடுத்து பக்தர்கள் நாளை முதல் தரிசனம் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ