உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆயிரக்கணக்கானோரை வாழவைக்கும் அயோத்தி ராமர் கோவில் மரசிற்பம்

ஆயிரக்கணக்கானோரை வாழவைக்கும் அயோத்தி ராமர் கோவில் மரசிற்பம்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் 22ம் தேதி என்றாலும், இப்போது முதலே அயோத்திக்கு வரும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.வரக்கூடிய மக்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் அயோத்தி சென்று வந்ததன் அடையாளமாக, மரத்தால் செய்யப்பட்ட ராமர் கோவிலின் மாதிரி சிற்பத்தை வாங்கி செல்கின்றனர்.'ஜெய் ஸ்ரீராம்' என்று எழுதப்பட்ட மோதிரம், கை வளையங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்பட்டாலும், மாதிரி சிற்பத்தின் விற்பனை களைகட்டியுள்ளது. இந்த மர சிற்பங்கள், 100 முதல் 8,000 ரூபாய் வரை விதவிதமான அளவில் விற்கப்பட்டாலும், பாக்கெட் அளவிலான, 100 ரூபாய் மாதிரி சிற்பத்தையே மக்கள் அதிகம் வாங்கி செல்கின்றனர். இங்கு, 10 அடிக்கு ஒரு கடை இருந்தாலும், அத்தனை கடைகளிலும் இந்த மாதிரி சிற்பங்கள்தான் அதிகம் விற்கின்றன. இதன் வாயிலாக, ஒரு நாளில் ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகளின் குடும்பங்களுக்கு, இந்த ராமர் கோவில் மாதிரி சிற்பம் படியளந்து கொண்டு இருக்கிறது. இந்த சிற்பங்களை, குடிசைத் தொழிலாக பலர் தயாரித்து வருகின்றனர். அவர்களில் ஒருவரான ஆதித்யா சிங் கூறியதாவது: நீண்ட காலமாக விளம்பர பிளக்ஸ் போர்டு தயாரித்து வந்தேன். இப்போது அதை ஓரங்கட்டிவிட்டு ராமர் கோவில் சிற்பம் தயாரிப்பதில் இறங்கிவிட்டேன்.டில்லியில் இருந்து தருவிக்கப்படும் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத 'பைன்வுட்' மரத்தகடுகளை வைத்து இந்த சிற்பங்கள் தயார் செய்யப்படுகின்றன. ஒருவர் ஒரு நாளைக்கு ஐந்து சிற்பங்கள் தான் தயார் செய்யமுடியும். இப்போதைக்கு 25 பேர் இரவு, பகலாக வேலை செய்கின்றனர். எவ்வளவு பேர் வந்தாலும் வேலை இருக்கிறது. ஆனால், நுட்பமான வேலைப்பாடு என்பதால் நிறைய பேர் இந்த வேலைக்கு வருவது இல்லை. 1,000 ரூபாய்க்கு மேல் உள்ள சிற்பங்களில், உள்ளே ராமர் உருவம் இருக்கும்; விளக்கு எரியும்; 'ராம் ராம்' என்று சங்கீதம் ஒலிக்கும்.மக்கள் வீடுகளில் வைத்துக் கொள்ளவும், பரிசளிக்கவும் சிறிய சிற்பங்களையே விரும்பி வாங்குகின்றனர். இதற்கு அதிக கிராக்கி இருப்பதால், ஒரு வியாபாரிக்கு 25 சிற்பங்களுக்கு மேல் கொடுப்பதில்லை.நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேவையைப் பார்த்தால், இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த தொழில் பலருக்கும் சோறு போடும் என தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

g.s,rajan
ஜன 15, 2024 21:07

எல்லாரையும் வாழவைக்கும் ராமர் உன்னதமான கடவுளில் மனிதப்பிறவிக்கு ஒரு அருமையான எடுத்துக்காட்டு....


RADE
ஜன 15, 2024 20:01

காலம் கனிந்து இருக்கும் பொழுது அதை பயன் படுத்தி நல்ல முதலீடு மற்றும் சொத்துக்களை சேர்த்து கொண்டு வள பழகிக்கணும் மர தச்சர்கள். இங்கு சிவகாசியில் இருப்பவர்களை போல உடலுக்கும் சுற்று சூழலுக்கும் கேடு விளைவிக்கும் பட்டாசு மற்றும் பிற மாநிலத்தில் பீடி புகையிலை செய்து பிழைக்கும் சிறு மக்கள் வாழ்வாதாரம் கெடும் என்று பொய் காரணம் காண்பித்து தொடர்ந்து பெரும் முதலைகள் அவர்கள் சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள். தடை செய்ய வேண்டிய பொருட்கள் இன்னும் நன்றாக கிடைக்கிறது


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 15, 2024 18:52

இந்த கோயில் மரச்சிற்பம் எங்கு கிடைக்கும், ஆன்லைனில் கிடைக்குமா என்று சிலர் கேட்கிறார்கள். நான் சொல்வேன் அயோத்தியில் கிடைக்கும் என்று. அடுத்த சில மாதங்கள் தமிழகத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களை உணவு, தங்குமிட வசதிகளுடன் இலவசமாக ரயிலில் அழைத்து சென்று வர பாஜக நடவடிக்கை எடுத்து வருகிறது. அயோத்திக்கு நேரில் சென்று சரயு நதியில் குளித்து விட்டு, அந்த பிரமாண்டமான ஆலயத்தில் ஶ்ரீ ராமரை தரிசித்துவிட்டு நினைவுப்பரிசாக இந்த சிற்பத்தை வாங்கி வாருங்கள். வாழ்வில் சிறந்த அனுபவமாக இருக்கும்.


கடவுள் இராமர்
ஜன 15, 2024 15:26

படியளக்கும் எங்கள் இராம பிரான்!!! ????


Kalyanaraman
ஜன 15, 2024 11:00

பண்டைய காலத்தில் பக்தி மட்டுமல்லாமல், அந்தந்த ஊர் மக்களின் பொருளாதாரம், வாழ்க்கை தரம், கல்வி, வேதம், இசை, கலை, ஆகமம், வீரம் போன்று அனைத்தும் அந்த ஊர் கோயிலைச் சார்ந்து இருந்தது.


ராமகிருஷ்ணன்
ஜன 15, 2024 07:17

தமிழகத்தில், சென்னையில் கிடைக்குமா. ஆன்லைனில் கிடைக்க வழி உள்ளதா


Oru Indiyan
ஜன 15, 2024 07:11

எங்கு கிடைக்கும். தயவுசெய்து அவர்களின் கைபேசி எண் கொடுங்கள்.


N SASIKUMAR YADHAV
ஜன 15, 2024 02:25

இந்துமத கோயில்களின் பெருமையே இதுதான்


N SASIKUMAR YADHAV
ஜன 15, 2024 02:25

இந்துமத கோயில்களின் பெருமையே இதுதான்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி