உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆயுஷ்மான் பாரத் திட்டம் தமிழக பயனாளிகள் 90 லட்சம்

ஆயுஷ்மான் பாரத் திட்டம் தமிழக பயனாளிகள் 90 லட்சம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஆயுஷ்மான் பாரத்' காப்பீடு திட்டத்தில் தமிழகத்தில், 90 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2018, செப்., 23ல், 'ஆயுஷ்மான் பாரத்' காப்பீடு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. நம் நாட்டில் நலிவடைந்த பிரிவினரின் மருத்துவ சிகிச்சைக்காக இத்திட்டம் துவங்கப்பட்டது. இதில், 55 கோடி மக்கள் இணைந்துள்ளனர். நாடு முழுதும் 32,000 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நாட்டின் எந்த மருத்துவமனையிலும் ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை பெற முடியும். அதிகபட்சமாக தமிழகத்தில் 90 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக, கர்நாடகாவில் 66 லட்சம் பேரும், ராஜஸ்தானில் 57 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டம் துவங்கப்பட்டு ஏழு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: நாடு முழுதும் இதுவரை 6.5 கோடிக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். இதற்காக 82,000 கோடி ரூபாய் வரை மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. இதில், 1.15 கோடி பேர் 45 முதல் 59 வயதினர். பாதிக்கப்பட்ட நபர்களில், அதிகபட்சமாக இதயம், சிறுநீரக பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sivaram
செப் 24, 2025 12:47

ஸ்டாலின், கமல், விஜய், காங்கிரஸ் அடிமைகள் , வைகோ , கம்யூனிஸ்ட் , திருமா , பிற பிற கொத்தடிமைகள் ஒருவர் கூட வாயை திறந்து பாராட்டவில்லையே , என்ன ஒரு திமிர் பிடித்த கூட்டம் , இவர்கள் பின்னால் ஓடும் உடன்பிறப்புகள் மூடர்கள் மிக மிக கஷ்டமான காலம்


Ambedkumar
செப் 24, 2025 08:14

அண்ணாமலை மற்றும் தமிழிசை போன்றவர்களைத்தவிர, தமிழக பாஜகவில் எவரும் மத்திய அரசு தமிழகத்திற்க்காக முன்னெடுக்கும் பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களைப் பற்றி பேசுவதே கிடையாது. மாநில பாஜக தலைவர் திமுக தோல்வியடையும் என்று ஆருடம் மட்டுமே சொல்லிக்கொண்டு ஊடங்களின் எதிரே மட்டும் பேசுகிறார். தமிழகத்தின் இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியில் மத்திய அரசின் பங்கு கணிசமானது. தேசிய நெடுஞ்சாலைகள், புதிய ரயில் பாதைகள், அதிவேக ரயில்கள், புதிய துறைமுகங்கள், இலவச எரிவாயு, குடிநீர் இணைப்புகள், கழிவுநீர் இணைப்புகள், கழிப்பிடங்கள், கிராமப்புற சாலைகள், சூரிய ஆற்றல், முத்ரா கடன், மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள், மருத்துவக் காப்பீடு, சிறு குறு விவசாயிகளுக்கு 6000 ரூபாய் உதவி, போன்ற எத்தனையோ நன்மைகள். இதை ஆதார பூர்வமாக மக்களிடம் எடுத்துச் சொல்ல பாஜக தலைவர்கள் முன் வரவேண்டும்.


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 24, 2025 08:07

அய்யா நமது மாநிலத்தில்தான் நோயாளிகள் அதிகம். முதன்மை மாநிலம். ஸ்டிக்கர் ஒட்டி கொண்டாடுவோம். ஒரு பாராட்டு விழா நடத்தி தூய்மை பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் டான்ஸ் ஆடச்சொல்லி வீடியோ போடுவோம்.


Kasimani Baskaran
செப் 24, 2025 03:47

என்னது ஸ்டிக்கர் ஒட்டாத திட்டத்துக்கும் தமிழகத்தில் ஆதரவா... இதில் 45 லட்சம் பேர் ஓட்டுப்போட்டாலே பாஜக பல தொகுதிகளில் ஜெயிக்கும்.. திராவிடப் பொய்களுக்கிடையில் ஒரு கட்சி ஆட்சி செய்து பொது மக்களுக்கு நன்மை செய்கிறது என்பது கூட புரியாத தமிழினம்... பாரம்பரியம் மிகுந்த தமிழினத்துக்கு முன்னோடி திராவிடனாம் - என்ன ஒரு வெட்கக்கேடு..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை