உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாபா சித்திக் கொலை வழக்கு; முக்கிய குற்றவாளி கைது

பாபா சித்திக் கொலை வழக்கு; முக்கிய குற்றவாளி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். மஹாராஷ்டிராவில் முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பாபா சித்திக் கடந்த அக்., 12ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு சிறையில் உள்ள பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலுக்கு தொடர்பிருப்பதும், 3 பேர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளியான ஷிவ் குமார் தலைமறைவாகியிருந்தார். ஷிவ் குமாருக்கு அடைக்கலம் கொடுத்து, தப்பியோடுவதற்கு உதவிய 4 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இதனிடையே, ஷிவ் குமாரை கைது செய்ய, மும்பை போலீசாரும், உ.பி., சிறப்பு அதிரடிப்படையினரும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில், உத்தரபிரதேசத்தின் பஹரைச்சில் வைத்து ஷிவ் குமார் மற்றும் அவனது கூட்டாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். நேபாளத்திற்கு தப்பியோட முயற்சித்த போது பிடித்துள்ளனர். அவனிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் சொல்லியே, பாபா சித்திக்கை கொலை செய்ததாக ஷிவ் குமார் வாக்குமூலம் அளித்துள்ளான். அன்மோல் பிஷ்னோய் சமூக வலைதளமான ஸ்னாப் சாட்டின் மூலம் குற்றவாளிகளை தொடர்பு கொண்டு பேசி, உத்தரவுகளை பிறப்பித்ததாகவும், லாரன்ஸ் பிஷ்னோயின் நெருங்கிய நண்பராக பார்க்கப்படும் சுபம் லோங்கரின் உதவியால், அன்மோல் பிஷ்னோயை ஷிவ்குமார் பலமுறை தொடர்பு கொண்டு பேசியதும் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை