மேலும் செய்திகள்
தனியார் தோட்டத்தில் உயிரிழந்த சிறுத்தை
22-Nov-2024
கனமழையில் வெள்ளக்காடானது ஸ்பெயின்!
01-Nov-2024
சாம்ராஜ்நகர் : மின் வேலியில் சிக்கிய குட்டி யானை உயிரிழந்தது.குண்டுகெரே மண்டலம், மங்களா கிராமத்தில் ஷெரிப் என்பவர் தன் விவசாய நிலத்தில் தினை பயிரிட்டு வந்துள்ளார். இப்பகுதி அருகே பண்டிப்பூர் புலிகள் காப்பகம் உள்ளதால், யானைகள் உணவு தேடி ஊருக்குள் வந்து செல்வது வழக்கம். அப்போது, நிலத்தில் உள்ள பயிர்களை யானைகள் நாசம் செய்கின்றன.இதைத் தடுக்க, நில உரிமையாளர் ஷெரிப், நிலத்தை சுற்றி சட்ட விரோதமாக மின்சார வேலி அமைத்திருந்தார்.நேற்று உணவு தேடி, ஒரு குட்டி யானை வந்துள்ளது. நிலத்தினுள் புகுந்தபோது, மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் உயிரிழந்த யானையை சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர். அந்த யானைக்கு ஒன்று அல்லது இரண்டு வயது இருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.நில உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
22-Nov-2024
01-Nov-2024