உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்ப்பிணி பசுவுக்கு வளைகாப்பு 500 பேருக்கு தடபுடல் விருந்து

கர்ப்பிணி பசுவுக்கு வளைகாப்பு 500 பேருக்கு தடபுடல் விருந்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹாசன்: கர்நாடகாவில் தொழிலதிபர் ஒருவர், தன் கர்ப்பிணி பசுவுக்கு, ஹிந்து சம்பிரதாயப்படி வளைகாப்பு நடத்தி, 500 பேருக்கு தடபுடலாக விருந்தும் வைத்து அசத்தியுள்ளார்.ஹிந்து சம்பிரதாயத்தில், கர்ப்பிணிக்கு வளைகாப்பு நடத்தும் வழக்கம் உள்ளது. கர்நாடக மாநிலம், ஹாசனில் வசிக்கும் தொழிலதிபர் தினேஷ்.

சடங்கு

இவர் வளர்ப்பு பிராணிகள் மீது, அதிக அன்பு கொண்டவர். தன் இல்லத்தில் பசுக்கள், காளைகள் வளர்க்கிறார்.பெங்களூரின், பிடதி அருகில் உள்ள கிராமத்தில் இருந்து, ஹள்ளிகார் இனத்தைச் சேர்ந்த நான்கு மாத பெண் கன்றுக்குட்டியை சில ஆண்டுகளுக்கு முன் வாங்கி வந்தார். இதற்கு, 'கவுரி' என, பெயர் சூட்டி வளர்க்கிறார்.தற்போது கர்ப்பமாக உள்ள கவுரி பசுவுக்கு, வளைகாப்பு நடத்த முடிவு செய்தார். சென்னராயபட்டணாவில் உள்ள திருமண மண்டபத்தில், பசுவுக்கு நேற்று ஹிந்து சம்பிரதாயப்படி வளைகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பெண்களுக்கு நடப்பது போன்று அனைத்து சடங்குகளும் நடந்தன.கவுரி பசுவை அலங்கரித்து, பூ மாலைகள் அணிவித்தனர். வெற்றிலை, பச்சை நிற வளையல்கள், அட்சதை, தேங்காய், பழங்கள் வைத்து ஆரத்தி எடுத்தனர். வளைகாப்பு நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு ஐந்து விதமான சாதம் உட்பட, பிரமாண்டமான விருந்து பரிமாறப்பட்டன.பசுவின் கர்ப்ப காலம் ஒன்பது மாதங்கள். இன்னும் ஒரு வாரத்தில் கவுரிக்கு பிரசவமாக உள்ளது. இதனால், தினேஷ் பல லட்சம் ரூபாய் செலவிட்டு, வளைகாப்பு நடத்தியுள்ளார்.

விழிப்புணர்வு

தொழிலதிபர் தினேஷ் கூறியதாவது:ஹள்ளிகார் இன பசுக்கள், உள்நாட்டு இனமாகும். தற்போது இந்த இனம் அழிவின் விளிம்பில் உள்ளது. இதை காப்பாற்றி பாதுகாப்பது நம் கடமை. எனவே, இந்த இன பசுவை வாங்கி வளர்க்கிறேன்.கர்ப்பம் தரித்துள்ள கவுரிக்கு வளைகாப்பு நடத்தியதன் வாயிலாக பசுக்களை பாதுகாக்கும்படி, விவசாயிகள், கால்நடை பிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். வெறும் வியாபார நோக்கில் பசுக்களை வளர்க்க கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Sakthibalan
ஏப் 07, 2025 15:57

மிகவும் நல்ல செயல் ஐயா வாழ்க......நலமுடன்


Sakthibalan
ஏப் 07, 2025 15:51

Super


GMM
ஏப் 07, 2025 15:13

நாட்டு பசு கன்று பிறப்பு இறப்பு விவரங்களை உள்ளாட்சி அமைப்புகள் கட்டாயம் பராமரிக்க நாடு முழுவதும் சட்டம் தேவை. நாட்டுப்பசு வளர்பவருக்கு தேர்தல் ஆணையம் இரட்டை வாக்குரிமை தர வேண்டும்.


sribalajitraders
ஏப் 07, 2025 11:16

நல்ல கல்வி அறிவை குடுக்க வேண்டும்


Indian
ஏப் 07, 2025 08:53

அப்படியே .....


GMM
ஏப் 07, 2025 08:26

செய்தியை கொண்டு அனைத்து மாநில நிர்வாகம் உள்நாட்டு இன பசு, காளை, ஆடுகள் அழிவை தடுக்க வேண்டும். நாட்டில் பசுவதை செய்வதை சட்டம் தடுக்க வேண்டும். பசு ஒரு அதிசய பிறவி. சுற்று சூழலுக்கு ஏற்றது.


Sampath Kumar
ஏப் 07, 2025 08:15

அவன் அவன் தனது நாடு முன்னேற வேண்டும் என்று புதியதாக ஏதையாவது கண்டு பிடுத்து கொண்டே இருக்கான் ஆனால் இங்கே இன்னும் மாட்டை கட்டி அழுகின்றார்கள் இதுவரை பிஜேபி ஆட்சில் புதிய கண்டு பிடிப்பு வந்து உள்ளதா? கண்டு பிடித்து சொல்லுங்கள் பார்க்கலாம்


Svs Yaadum oore
ஏப் 07, 2025 09:12

ஊரெங்கும் ஞாயிற்று கிழமை வந்தால் அறிவுபூர்வ விஞ்ஞான எழுப்புதல் கூட்டம் நடத்தறானுங்களே ....அதை சொல்றீங்களா ...


ராஜ்
ஏப் 07, 2025 10:41

எவனாவது நாய்க்கு மட்டும் சொத்து எழுதி வைத்தால் ஆஹா ஓஹோ ன்னு சொல்ல வேண்டியது


ஆரூர் ரங்
ஏப் 07, 2025 11:04

ஜல்லிக்கட்டால நாடு வளர்ந்ததா? கடற்கரை சமாதிகளால் என்ன பயன்?


VENKATASUBRAMANIAN
ஏப் 07, 2025 07:43

வாழ்த்துக்கள் நல்ல முயற்சி விழிப்புணர்வு. இதை மற்றவர்களும் பின் பற்றலாமே


Svs Yaadum oore
ஏப் 07, 2025 07:28

விடியல் திராவிடனுங்களை இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்து பசுவை அவனுங்க கண்ணில் காட்ட கூடாது ....


Svs Yaadum oore
ஏப் 07, 2025 07:23

ஹள்ளிகார் இன பசுக்கள், உள்நாட்டு இனமாகும். தற்போது இந்த இனம் அழிவின் விளிம்பில் உள்ளது. இதை காப்பாற்றி பாதுகாப்பது நம் கடமை. எனவே, இந்த இன பசுவை வாங்கி வளர்க்கிறேன் என்று செய்தி .....தமிழ் நாட்டிலும் இது போல் நாட்டு மாடுகள் அழிவின் விளிம்பில் உள்ளது ....பாதுக்காக்கப்படவேண்டியவை நாட்டு இன மாடுகள் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை