உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி., போலீசை கைது செய்ய வந்த டில்லி போலீசாருக்கு காப்பு

உ.பி., போலீசை கைது செய்ய வந்த டில்லி போலீசாருக்கு காப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பணிபுரியும் இரண்டு போலீசாரை, முறையான அறிவிப்பு மற்றும் முன் அனுமதியின்றி வழக்கு ஒன்றில் கைது செய்ய வந்த டில்லி போலீசாரை உ.பி., போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.டில்லியைச் சேர்ந்தவர் அன்கித் ஜெயின். இவரது சகோதரி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் உ.பி., போலீசில் கான்ஸ்டபிளாக பணிபுரியும் சச்சின் மற்றும் விஸ்வஜீத் ஆகியோர் பங்குதாரர்களாக செயல்பட்டனர். இவர்கள் அந்நிறுவனத்தின், 1.5 கோடி ரூபாயை மோசடி செய்ததாக சண்டை ஏற்பட்டது. இதையடுத்து, இந்த மோசடியில் ஈடுபட்ட உ.பி., போலீசார் சச்சின் மற்றும் விஸ்வஜீத் மீது டில்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் இருவரையும் கைது செய்ய நேற்று முன்தினம் தனியார் காரில் டில்லி போலீசார் துப்பாக்கிகளுடன் உ.பி.,யின் லலித்பூருக்கு வந்தனர்.போலீஸ் குடியிருப்பில் இருந்த கான்ஸ்டபிள் இருவர் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை டில்லி போலீசார் கைது செய்தனர். இது குறித்து உ.பி., போலீசாருக்கு அவர்கள் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பதிலுக்கு உ.பி., போலீசார் டில்லி போலீசாரை கைது செய்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர்.அங்கு நாள் முழுதும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின் டில்லி போலீசார் மன்னிப்பு கேட்ட பிறகே விடுவிக்கப்பட்டனர். முறையான ஆவணங்களுடன் வந்து விசாரணையை தொடரும்படி, உ.பி., போலீசார் கேட்டுக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
பிப் 20, 2025 07:14

அதானே. முன்னாடியே சொல்கியிருந்தா எங்க பங்கை நாங்க மிரட்டி வாங்கிட்டு உங்களுக்கு புடிச்சு குடுத்திருப்போம்ல. என்ன பங்காளி?


Bye Pass
பிப் 20, 2025 03:55

ரெண்டு அரசாங்கமும் காவி கும்பல் ..எதுக்கு நாடகம் ?


திகழ் ஓவியன்,Ajax,Ontario
பிப் 20, 2025 07:15

முன்ன கருப்பு கொடி, பலூன் கோ பேக் மோடி...தற்போது...? அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள்? எங்கேயா கேட்டதில் பிடிச்சது