ஜாமின் உத்தரவு ரத்து
புதுடில்லி:குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்புடைய இருவருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்த டில்லி உயர் நீதிமன்றம், குழந்தைகளை பண்டமாக விற்பனை செய்த போக்கை கடுமையாக கண்டித்துள்ளது. பூஜா மற்றும் பிம்லா என்ற இருவர், குழந்தை கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் ஜாமின் மனுக்களை விசாரித்த விசாரணை நீதிமன்றம், ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஆனால், அவர்களின் ஜாமின் மனுக்களை நேற்று ரத்து செய்து, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில்,'இருவருக்கு ஜாமின் வழங்க உத்தரவிட்ட செஷன்ஸ் நீதிமன்றம் சரி வர இவர்களின் குற்றங்களை ஆராயவில்லை. குழந்தைகளை பண்டங்கள் போல விற்பனை செய்ததை ஏற்கவே முடியாது' என கூறினார்.