உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரஷாந்த் பூஷனை தாக்கியவர்களுக்கு பால் தாக்கரே பாராட்டு

பிரஷாந்த் பூஷனை தாக்கியவர்களுக்கு பால் தாக்கரே பாராட்டு

மும்பை: காஷ்மீர் மாநிலம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்காக அன்னா குழுவில் இடம்பெற்றுள்ள பிரஷாந்த் பூஷன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை நடத்தியவர்களுக்கு சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கட்சி பத்திரிகையில் எழுதியுள்ளதாவது: நாட்டை பிரிவினை தொடர்பாக பேசியவர்கள் மீது தாக்குதல் நடத்தி சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது. இதனை நடத்தியவர்களுக்கு பாராட்டுக்கள் என கூறினார். பிரிவினை வாத கருத்துக்களை தெரிவித்தது குற்றம். அவர்களுக்கு சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ