வாசகர்கள் கருத்துகள் ( 21 )
திடீரென வேற்றுலக அரக்கர்கள் பூமியை ஆக்கிரமித்து, மனிதர்களைக் கொன்று உண்ண ஆரம்பித்தால், 'என் உணவு என் உரிமை' சாயம் வெளுத்துவிடும்.
மாட்டு கறி வருவல் ஆரம்பத்தில் ஒரு சிறிய தட்டு பத்து ரூபாய்க்கு தள்ளுவண்டி கடை மற்றும் மரண விலாஸ், மில்ட்ரி ஓட்டலில் கிடைக்கும் அதை சாப்பிடுபவர்கள் வீட்டுக்குள் வரும் முன்பு குளித்துவிட்டு தான் உள்ளே வருவார்கள் வீட்டில் சமைக்க மாட்டார்கள். ஒரு மாதம் முதல் ஆறுமாதம் உள்ள இளம் கிடா குட்டி மாடுகளை வாங்க போட்டி உண்டு... கறவை மாடுகள் கூட வெட்டி சாப்பிடும் நிலை உண்டு. தோல், எலும்பு, கொழுப்பு என அனைத்துக்கும் நல்ல விலை உண்டு. கொன்றால் பாவம் தின்றால் போச்சு... முடிந்தால் செவ்வாய், வியாழன் நடக்கும் பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு வந்து பாருங்கள் நிலவரம் புரியும்.
மாடு என்றால் தமிழில் செல்வம் என்று பொருள். கறவை, பசு, காளை என்ற பகுபாடு இல்லை. ஆடு, மாடுகளை வெட்டுவது, இறைச்சிக்கு உணவாக்குவது போன்றவை மூலம் நீர் நிலை, விளை நிலங்கள் குறைந்து விடும். சுற்றி சூழல் பாதிக்கும். ஆடு, மாடு, வன மிருகங்களுக்கான உணவு. மனிதர்கள் கட்டுப்பாட்டுடன் முதலில் பயன்படுத்த அனுமதித்து, பின் பலன் அறிந்து, தடுத்து விட வேண்டும். சாதி, மத பிரச்சனையை இதில் பிணைக்க கூடாது.
டீம்கா, காங்கிரஸ் கொத்தடிமைகள் சரியா படிக்காமே, புரிஞ்சுக்காமே கருத்து போடுறாங்க .... பொது இடங்களில் உண்ணத்தான் தடை .....
ஹோட்டல்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள சிறிய உணவகங்களில் மட்டும் தான் மாட்டிறைச்சி விற்க மாநில அரசு தடை விதித்துள்ளது.
கறிக்காக மாடு வளர்க்க பல லட்சம் லிட்டர் மறை நீர் வீணாகிறது. அதனை வைத்து பல ஏக்கர் நிலங்களில் பயிர் செய்யலாம் ஆனால் நிதர்சனம் வேறு. கறவை நின்றுபோன மாடுகளை வைத்துக் காப்பாற்ற எளிய விவசாயிகளால் இயலாது. அரசும் தனியாரும் போதுமான அளவுக்கு கோசாலைகளை அமைத்து முடிக்கும் வரை மாடுகளை அடிமாட்டுக்கு விற்கும் பழக்கத்தை நிறுத்த முடியாது. ஏழை விவசாயிகள் வயதான மாடுகளை வெளியில் அவிழ்த்து துரத்தி விடுவார்கள் அவை விளைபயிர்களை மேய்ந்து தொல்லை கொடுக்கும். அது பின்னர் சமூகப் பிரச்சனையாகி விடும்.
இவனுகளுக்கு பசு, பாகிஸ்தான், காங்கிரஸ், திராவிட, மத மாற்றம், மனம் புண்படுதல், இந்துக்களுக்கு ஆபத்து இதை தவிர வேற ஒரு எழவும் தெரியாது. இதை சொன்னா என்னை ஆன்டி இந்தியன்....
எல்லா சீரியஸ் விஷயங்களை விவாதிக்கும் போதும் திடீரென ஹிந்தி எதிர்ப்பு என மடைமாற்றி ஊரை ஏமாற்றுவது 21 ம் பக்க டகால்டி வேலை. எங்கோ உள்ள பாலஸ்தீன விவகாரத்துக்கு போராட்டம் நடத்தும் அவர்கள் அண்டை நாடான வங்க தேசத்தில் ஹிந்துக்கள் இனஅழிப்பு பற்றி பேச மாட்டீர்கள். பிஜெபி பேசினால் அது மதவாதமா?
அசைவ பிரியர்கள் உண்ணும் மாட்டிறைச்சி இந்துக்களின் புனிதமான பசுமாட்டு இறைச்சி இல்லை. ஆண்டு தோறும் பல கோடிக்கணக்கான மாடுகள் வெட்டப்பட்டாலும் மாடுகள் பற்றாக்குறை ஏற்பட்டதே இல்லை. குஜராத்தில் இருந்து ஹிந்து ஏற்றுமதியாளர்கள் தான் பல கோடி ரூபாய்க்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கிறார்கள். மற்றொரு கோணத்தில் பார்த்தால் மாடுகளின் நடமாட்டம் ஊர் முழுவதும் நிரம்பிவிடும். கடவுள் எல்லாவற்றையும் அறிந்தே உண்பதற்கும் படைத்துள்ளார். இந்து மதத்தில் மாட்டிறைச்சி உண்பதற்கு தடை இல்லை. இது ஒரு இடைச்செருகல். சைவம் அசைவம் அவரவரது தனி விருப்பம். இதில் அரசுக்கு என்ன வேலை?
பாஜக ஆட்சி செய்யும் எந்த மாநிலத்திலாவது கல்வி, தொழில், வேலைவாய்ப்பு முன்னேற்ற திட்டம் ஒன்றாவது அறிவித்து அமல் படுத்தியதாக யாராலாவது சொல்ல முடியுமா?
மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டால் அது உணவு விஷயத்தில் தலையிட்டது போல் ஆகாது. மாடுகளுக்கும், விவசாயத்திற்கும் நேரடி சம்பந்தம் உண்டு. பசும்பால் குழந்தைகளுக்கு அத்தியாவசியமானது. நண்பர்களைக் கண்டால் டீ சாப்பிடறீங்களா? என்று கேட்கிறோம். மாடுகள் இல்லையென்றால் கட்டஞ்சாயா தான். இலங்கை மக்கள் எல்லா மாடுகளையும் கொன்று தின்று விட்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவினை வாங்கி சாப்பிடுகிறார்கள். அது மாதிரியான கடின நிலைக்கு நம் பாரத மக்கள் தள்ளப்பட வேண்டுமா? ஏராளமான மாடுகளை வளர்த்தால் பால் பொருட்களை வெளிநாடுகளுக்கு விற்று நிறைய சம்பாதிக்கலாம். பால் பொருட்களுக்கு ஏராளமான நாடுகளில் நல்ல கிராக்கி இருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் மாடுகளை கொன்று தின்கிறார்கள். அல்லது மாட்டிறைச்சியை இறக்குமதி செய்து தின்கிறார்கள். ஏன் என்று கேட்டால், அங்கு அரிசி, கோதுமை இரண்டும் விளைவதில்லை. சூடான தட்பவெப்ப நிலை கொண்ட நம் நாட்டில் அன்றாடம் மாட்டிறைச்சி உண்டாலோ, அல்லது அவ்வப்போது அதிகமாக மாட்டிறைச்சி உண்டாலோ அது ஹிருதயத்தில் கொழுப்பினைச் சேர்த்து ஹிருதயம் பலமிழந்து விடும். அதனால், மாட்டிறைச்சியை உண்மையும், மாட்டிறைச்சியை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதையும் தவிர்ப்போம். ஏராளமான மாடுகளை கிராமங்களில் வளர்ப்போம். பால் கறப்பதற்கு மிஷன் இருக்கிறது. ப்ரொஃபஷனலாக பெரிய அளவில் மாட்டுப் பண்ணை வைத்தால் பால், தயிர், நெய், ஐஸ்கிரீம் மூலம் நல்ல வருமானம் உண்டு. அஸ்ஸாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்கள் சொன்னது சரிதான்.
நீங்கள் சொல்வதெல்லாம் கறவை மாடுகள் பற்றி. பாலும் வற்றி, இனி கருத்தரிக்கவும் இயலாத மாடுகளையும், இனி, பசுவுடன் இணையவோ, ஏர் உழவோ, வண்டி இழுக்கவோ இயலாத மாடுகளைத் தான் இறைச்சிக்காக விற்கறார்கள் வெட்டுகிறார்கள். நல்லா பால் தருகிற மாடுகளையோ, நல்லா வண்டி இழுக்கிற மாடுகளையோ யாரும் இறைச்சி க்கு விற்கவோ, வெட்டவோ மாட்டார்கள். இந்த தடை எல்லாம் அரசியல் மற்றும் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்கிறவர்களின் ஆணைப்படி பாஜக செய்யவைப்பது.