மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
28 minutes ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
28 minutes ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
39 minutes ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
40 minutes ago
சாம்ராஜ்நகர்: குண்டுலுபேட்டின், பிரசித்தி பெற்ற ஹிமவத் கோபால சுவாமி மலையை சுற்றிலும், ட்ரோன் மற்றும் கேமரா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.சாம்ராஜ்நகர், குண்டுலுபேட்டின், பண்டிப்பூர் புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதியில், ஹிமவத் கோபால சுவாமி மலை உள்ளது. இங்குள்ள கோவில் வரலாற்று பிரசித்தி பெற்றது. திருத்தலம் மட்டுமின்றி, இயற்கை காட்சிகள் நிறைந்த சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. பக்தர்கள், சுற்றுலா பயணியரை ஈர்க்கிறது. வன விலங்குகள் வசிக்கும் இடமான ஹிமவத் கோபால சுவாமி மலையில், யானையை பார்க்க பலர் காத்திருப்பர்.போட்டோ, வீடியோ மற்றும் செல்பி எடுக்கின்றனர். மாலை நேரத்தில் அதிகமான சுற்றுலா பயணியர் குவிகின்றனர்; யானைகள் அருகில் சென்று வீடியோ, செல்பி எடுக்கின்றனர். இவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர். யானைகளால் சுற்றுலா பயணியர் தொந்தரவுக்கு ஆளாகின்றனர்.சமீபத்தில் பத்திரிகையாளர் விஸ்வேஸ்வர பட், ட்ரோன் கேமராவில் படப்பிடிப்பு நடத்தினார். போட்டோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இது சர்ச்சைக்கு காரணமானது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.இதை தீவிரமாக கருதிய தாலுகா நிர்வாகம், ஹிமவத் கோபால சுவாமி மலையை சுற்றிலும், ட்ரோன் மற்றும் கேமரா படப்பிடிப்புக்கு தடை விதித்துள்ளது.
28 minutes ago
28 minutes ago
39 minutes ago
40 minutes ago