உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குண்டளை அணையில் பயணிகளுக்கு தடை

குண்டளை அணையில் பயணிகளுக்கு தடை

மூணாறு:குண்டளை அணையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல 2 வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம் மூணாறு அருகே டாப் ஸ்டேஷன் ரோட்டில் 20 கி.மீ., தொலைவில் குண்டளை அணை உள்ளது. அதனை மின்வாரியத்தினர் பராமரித்து வருகின்றனர். அணையில் ஆண்டு பராமரிப்பு பணிகள் இரண்டு வாரங்கள் நடக்க உள்ளது.இங்கு மின்வாரியத்தின் ஹைடல் டூரிசம் சார்பில் பெடல், துடுப்பு படகுகள், தேனிலவு தம்பதியினர் விரும்பும் காஷ்மீர் சிக்காரா உள்பட பல்வேறு வகை சுற்றுலா படகுகள் இயக்கப்படுகின்றன. பராமரிப்பு பணிகள் நடப்பதால் சுற்றுலா படகு சேவை நிறுத்தப்பட்டு அணைக்கு பயணிகள் செல்ல 2 வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அணை வழியாக குண்டளை, செண்டுவாரை ஆகிய எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை