உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தண்டவாளங்களில் சோலார் பேனல்கள் பொருத்தி மின் உற்பத்தி: சபாஷ் இந்திய ரயில்வே

தண்டவாளங்களில் சோலார் பேனல்கள் பொருத்தி மின் உற்பத்தி: சபாஷ் இந்திய ரயில்வே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாரணாசி: ரயில் தண்டவாளங்களில் சோலார் பேனல்களை பொருத்தி, மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை ரயில்வே தொடங்கி இருக்கிறது.நாட்டில் உள்ள ரயில் நிலையங்களை மின்சார உற்பத்தி நிலையங்களாக மாற்றும் திட்டத்தில் ரயில்வே துறை இறங்கி இருக்கிறது. அதற்காக ரயில் தண்டவாளங்களில் எளிதில் அகற்றக் கூடிய வகையிலான சோலார் பேனல்களை அமைக்கும் புதிய முயற்சியில் ரயில்வே துறை வெற்றி கண்டுள்ளது.இந்த வெற்றியை வாரணாசியில் உள்ள பனாரஸ் ரயில்வே ஊழியர்கள் சாத்தியப்படுத்தி உள்ளனர். இந்த புதிய முன்னோடி திட்டம் ஆக.15ல் தொடங்கப்பட்டு உள்ளது, 28 சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட 70 மீட்டர் நீளத்தைக் கொண்டு உள்ளதாக ரயில்வே பொது மேலாளர் நரேஷ் பால்சிங் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது; தற்போது செயலில் உள்ள ரயில் பாதைகளுக்கு இடையில் இந்த சோலார் பேனல் அமைக்கப்பட்டுள்ளது.எவ்வித போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது.இந்த திட்டம் சூரிய ஆற்றல் பயன்பாட்டில் ஒரு புதிய பரிமாணம் மட்டுமல்ல, இனி வரும் காலங்களில் இந்திய ரயில்வேயில் பசுமை ஆற்றல் உற்பத்திக்கான வலுவான மாதிரியாக செயல்படும்.இவ்வாறு நரேஷ்பால் சிங் கூறியுள்ளார்.இந்திய ரயில்வேயில் தண்டவாளங்கள் 1.2 லட்சம் கிமீ பரப்பளவில் இருப்பதால், தண்டவாளங்களுக்கு இடையிலான இடைவெளியில் இந்த பேனல்கள் பயன்படுத்தப்படுகிறது. இதன் பேனல்கள் மூலம் ஆண்டுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 3.21 யூனிட்கள் உற்பத்தியாகும்.இந்த திட்டத்தை விரிவுபடுத்தினால் ஆண்டுதோறும் ஒரு கிலோ மீட்டருக்கு கிட்டத்தட்ட 321,00 kwh மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பது நிபுணர்களின் பார்வையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

sivakumar
ஆக 19, 2025 14:38

இவங்களை திருத்தவே முடியாது...


ManiMurugan Murugan
ஆக 18, 2025 23:28

அருமையான திட்டம் ஆனால் நம் மக்கள் கை வரிசை காட்டாமல் இருக்க வேண்டும் புகைவண்டி நிலையங்களில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்வது அருமையான திட்டம்


N Annamalai
ஆக 18, 2025 23:09

தண்டவாளத்தின் ஓரங்கள் வெளி போட்டு செயல் படுத்தலாம் .மனித கழிவுகள் இதன் மேல் விழும் .அதை சுத்தம் செய்யும் பணி ஆள் ஒன்று தேவைப்படும்


என்னத்த சொல்ல
ஆக 18, 2025 22:36

ரயில் தண்டவாளங்களில் கழிவுகள் விழுந்து சேதமடைய வாய்ப்புள்ளது... அதை எப்படி தடுப்பார்கள் என தெரியவில்லை. ரயிலின் மேலயும், நிலையங்களின் மேலயும் அமைக்கலாமே...


vbs manian
ஆக 18, 2025 21:19

ஹைதெராபாத் நகரில் சோலார் பேனல் பொருத்தி ஒரு ரயில்வே ஸ்டேஷன் முழுதுமாக இயங்குகிறது.


K V Ramadoss
ஆக 18, 2025 21:18

எந்த புது முயற்சியையும் உற்சாகப்படுத்த வேண்டும்.. இங்கிருந்து படுத்துக்கொண்டே இது முடியாது அது நடக்காது என்பவர்களால் எந்த உபயோகமும் இல்லை. ஒரு புது முயற்சி ஆரம்பிக்கும்போது எத்தனையோ இடையூறுகள் வரலாம் அவற்றை எப்படி சமாளிப்பது என்று திட்டமிடவேண்டும்..நீங்கள் சொல்லும் பிரசனைகள் பற்றி ரயில்வே அதிகாரிகளுக்கு தெரியாதா, யோசித்திருக்க மாட்டார்களா? unless you are ready to take risk and face challenges, you can never develop...


இராம தாசன்
ஆக 18, 2025 20:50

வித்தியாசமாக யோசிப்பவர்ளை ஊக்கபடுத்த வேண்டும். நல்ல திட்டம் - குறை / நிறைகளை கண்டறிந்து செயல் படுத்த வேண்டும்..


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 18, 2025 19:32

போகாத ஊருக்கு வழி. சும்மா ஒரு சோதனைக்கு செய்து பாக்கலாம். அம்புட்டுத்தான். ஸ்டேஷனில் என்றால் மக்கள் மிதித்தே உடைத்துவிடுவார்கள். தூசி படர்ந்து வேலை செய்யாது. சுத்தம் செய்வது, பராமரிப்பு செய்வது சிரமம். ஊருக்கு வெளியே என்றால் திருடி விற்றுவிடுவார்கள். இதற்கு ஸ்டேஷன் பிளாட் பார்ம் கூரை மீது என்றால் ஓரளவு அர்த்தம் இருக்கிறது. சுத்தம் செய்வது, பராமரிப்பு செய்வது எளிது. திருட மாட்டார்கள்.


SANKAR
ஆக 18, 2025 21:21

it appears nobody understood my idea is solar panel ON ROOF of station.Not on any other place.it is not my invention either and it is successfully operating in MGR CENTRAL for FIVE years with no problem .Those in doubt and in Chennai can go enquire and see.


ஆரூர் ரங்
ஆக 18, 2025 19:29

ரயில் நிலையங்களில் மட்டுமே என்பதால் பாதுகாப்பு இருக்கும். ஆனால் கழிவுகள் விழாமல் எப்படி பாதுகாப்பார்கள்?. இதற்கு பதிலாக அரசுக் கட்டிடங்கள் பள்ளிக்கூரைகளில் சூரியஒளி பேனல் பொருத்துவதைக் கட்டாயமாக்கலாம்.


Rajthilak
ஆக 18, 2025 19:27

இந்த திட்டம் மெட்ரோ டிரெயின் டிராக்கில் பயன்படுத்தலாம். இரண்டுபக்க சூரிய தகடு மெட்ரோ ட்ராக்கில் பயன்படுத்தலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை