| ADDED : ஜன 05, 2025 06:04 PM
புதுடில்லி: வங்கதேச நீதிபதிகள் 50 பேர், இந்தியாவில் பயிற்சி பெற இருந்த திட்டத்தை வங்கதேச அரசு ரத்துசெய்துவிட்டது.வங்தேசத்தை நீதிபதிகள் உள்ளிட்ட நீதித்துறையில் 50 பேர், இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமி மற்றும் மாநில நீதித்துறை அகாடமியில் ஜன.10 முதல் 20 வரை பயிற்சி நடைபெற உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையின்படி, சட்டத்துறை அமைச்சகம், இந்த பயிற்சிக்கு அனுமதி அளித்தது.இந்நிலையில், இன்று வங்கதேச அரசின் சட்டத்துறை, நீதித்துறை மற்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கதேச நீதிபதிகள், இந்தியாவில் பயிற்சி பெறும் திட்டம் ரத்து செய்யப்பட்டது என தெரிவித்துள்ளது.வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்து இடைக்கால அரசு பொறுப்பேற்றது முதல் இந்தியா உடனான உறவு சீர்குலைந்துள்ளது.இடைக்கால அரசில் பொறுப்பில் உள்ள சிலர், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பேசி வருகின்றனர். சிறுபான்மை ஹிந்துக்கள் தாக்குதலுக்கி ஆளாகி உள்ளனர்.இந்த வேளையில் தான் இந்த பயிற்சி அளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.இதற்கிடையே, அங்குள்ள இடைக்கால அரசு, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷே க் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. இந்த கோரிக்கை குறித்து இந்திய அரசு பதில் தெரிவிக்காத நிலையில் வங்கதேச நீதிபதிகளின் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.