உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துறவி வேடத்தில் வங்கதேசத்தினர்: வேகம் எடுக்கும் ஆபரேஷன் கலாநெமி

துறவி வேடத்தில் வங்கதேசத்தினர்: வேகம் எடுக்கும் ஆபரேஷன் கலாநெமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டேராடூன்: துறவியாக வேடமிட்ட வங்கதேசத்தினர் உள்பட 14 பேரை உத்தராகண்ட் போலீசார் கைது செய்துள்ளனர். உத்தராகண்டில் மக்களை ஏமாற்றும் போலி சாமியார்களை 'ஆபரேஷன் கலாநெமி' என்ற பெயரில் போலீசார் கைது செய்து வருகின்றனர். இவர்களின் கைது நடவடிக்கையின் போது வங்கதேசத்தில் இருந்து ஊடுருபவர்களும் சிக்கி வருகின்றனர்.இந் நிலையில், 14 போலி சாமியார்களை அம்மாநில போலீசார் கைது செய்து இருக்கின்றனர். இவர்களில் வங்கதேசத்தை சேர்ந்த போலி நபர்களும் அடங்குவர்.இதுகுறித்து, சட்டம் ஒழுங்கு போலீஸ் ஐஜி நிலேஷ் ஆனந்த் பரானே கூறுகையில், ஆபரேஷன் கலாநெமி மூலம் நடவடிக்கையை வேகப்படுத்தி உள்ளோம். வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் உள்பட 14 போலி சாமியார்களை தற்போது கைது செய்திருக்கிறோம். இதுவரை மாநிலத்தில் மொத்தம் 5,500 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளோம். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 1182 பேரை கைது செய்துள்ளோம் என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramakrishnan Sathyanarayanan
செப் 08, 2025 15:03

காலநேமி என்பதுதான் சரியான பெயர்


Rathna
செப் 08, 2025 12:38

பங்களாதேஷி ஜிஹாதிகள் பாகிஸ்தானிய ஜிஹாதிகள் உதவியுடன் போலி வேடத்தில் உத்தரகண்ட் மாநிலத்தில் ஊடுருவி உள்ளனர். இவர்கள் திருடுவது, பெண்களிடம் தவறாக நடப்பது போன்ற செயல்களில் நடந்து, கொள்ளை அடித்து விட்டு வங்காளத்திற்கு தப்பி விடுகிறார்கள். இவர்களுக்கு வங்காளத்தில் ஆதார் வழங்கி, ஆதரவு இருப்பதால் இவர்கள் தப்பிக்க வழி கிடைக்கிறது. இவர்களை தமிழ்நாட்டில் திருப்பூர், ஈரோடு, கோவை பகுதிகளில் கண்காணிக்க வேண்டும். வங்காளம், ஜார்கண்ட் வரும் பல பேர் பங்களாதேஷிகளே. இவர்கள் மிக பெரிய சட்ட விரோத செயல்களை செய்து தமிழ்நாட்டின் பெயரை கெடுப்பதற்கு முன் இவர்களை விரட்டுவது நமது சட்டத்தின் கடைமை.


Ramesh Sargam
செப் 08, 2025 11:48

இதுபோன்ற போலிகளால் உண்மையான இந்திய துறவிகளுக்கும் பிரச்சினை. நாடு முழுவதும் உள்ள போலி துறவிகளை கடுமையாக தண்டிக்கவேண்டும். நாடு முழுவதும் உள்ள வெளிநாட்டு போலிகளை நாட்டைவிட்டே அடித்து துரத்தவேண்டும்.


c.mohanraj raj
செப் 08, 2025 11:40

விசாரணை என்ன விசாரணை நாடு கடத்துங்கள் இவர்களுக்கு யார் உதவுகிறார்கள் என்று பாருங்கள் அவர்களையும் சேர்த்து நாடு கடத்துங்கள்


V RAMASWAMY
செப் 08, 2025 11:13

பாகிஸ்தான் பயங்கரவாதி ஊடுருவல் நடவடிக்கை மாதிரி இப்பொழுது வங்க தேச ஊடுருவல் அதிகமாகியிருக்கிறது. இதில் விசாரணை தேவையில்லை. என்கவுண்டர்கள் மட்டுமே ஒரே வழி இதற்காக மற்றுமொரு சிந்தூர் ஆபரேஷன் நடத்தினாலும் ஓகே .


xyzabc
செப் 08, 2025 11:12

எல்லா வடிவங்களிலும் இந்த வந்தேறிகள் ?


AMMAN EARTH MOVERS
செப் 08, 2025 09:13

நாட்ல போலி சாமியார்கள் அதிகமாக இருக்காங்க எல்லாரையும் கண்டு புடிச்சி உள்ள வையுங்க


Artist
செப் 08, 2025 10:19

ஒரே வழி தான் இருக்கு


புதிய வீடியோ