உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டவிரோதமாக குடியேறிய பங்களாதேஷி கைது

சட்டவிரோதமாக குடியேறிய பங்களாதேஷி கைது

மஹிபால்பூர்: தென்மேற்கு டில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேச நாட்டு பிரஜையை போலீசார் கைது செய்தனர்.வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர் முகமது சாதிக்கூர் ரஹ்மான், 25. மருத்துவ சிகிச்சைக்காக அவர் இந்தியா வந்திருந்தார். அவரது விசா காலாவதி ஆன பிறகும் இங்கு தொடர்ந்து வசித்து வந்தார்.இதற்காக தன் இருப்பிடத்தை அவர் அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்துள்ளார். ஹோட்டல்களில் தங்கியிருந்த ரஹ்மான் பற்றி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அவரை பிடித்து விசாரித்தபோது, விசா காலாவதியான பிறகு சட்டவிரோதமாக தங்கியிருப்பதை அவர் ஒப்புக்கொண்டார்.வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலக நாடுகடத்தல் மையத்திற்கு ரஹ்மான் அனுப்பப்பட்டார். அவரை நாடு கடத்தும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ