வாக்காளர் பட்டியல் திருத்தம் எதிரொலி மூட்டை கட்டிய வங்கதேசத்தினர்: மே.வங்கத்தில் 1,200 பேர் வெளியேறினர்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ஹக்கீம்பூர்: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர், தங்கள் குடும்பத்தினருடன் சொந்த நாடு திரும்பத் துவங்கியுள்ளனர். சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த பீஹாரில், சில மாதங்களுக்கு முன் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக் காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. ஓட்டுச்சாவடி இதன் வாயிலாக, அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்த பலரின் ஓட்டுரிமை நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, உண் மையான வாக்காளர்கள் குழப்பமின்றி தேர்தலில் ஓட்டுகளை செலுத்தினர். அத்துடன், அடுத்தாண்டு சட்டசபை தேர்தலை சந்திக்கும் தமிழகம், மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர்., பணியை தேர்தல் கமிஷன் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. மேற்கு வங்கத்தில், கடந்த 4ம் தேதி முதல் இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை நிரப்பி வருகின்றனர். அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள், தங்கள் சொந்த நாடு திரும்ப துவங்கியுள்ளனர். குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் வெளியேறத் துவங்கிய அவர்களால், மேற்கு வங்க எல்லையில் அமைந்துள்ள ஹக்கீம்பூர் சோதனைச்சாவடி நிரம்பி வழிகிறது. அடுத்தடுத்து ஏராளமானோர் குவிந்ததை அடுத்து, அங்கு சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள வங்கதேசத்தினர், உரிய ஆவணங்கள் சரிபார்ப்புக்கு பின் எல்லை தாண்டி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். குற்ற வழக்கு இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: எஸ்.ஐ.ஆர்., பணி துவங்கிய நாள் முதலே, ஏராளமானோர் எல்லை தாண்டி வங்கதேசம் செல்ல துவங்கியுள்ளனர். நாள்தோறும் 150 - 200 பேர் வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றனர். கடந்த ஆறு நாட்களில், 1,200 பேர் வங்கதேசம் திரும்பியுள்ளனர். சம்பந்தப்பட்ட நபரின் விபரங்கள் மற்றும் புகைப்படங்கள் அவர்கள் தங்கி இருந்த பகுதி போலீசாருக்கு அனுப்பப்பட்டு, எந்த குற்ற வழக்கும் பதிவாகாத நிலையில் அவர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.