உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாடு முழுவதும் நடைபெற இருந்த வங்கி ஊழியர் ஸ்டிரைக் தள்ளி வைப்பு

நாடு முழுவதும் நடைபெற இருந்த வங்கி ஊழியர் ஸ்டிரைக் தள்ளி வைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை; நாடு முழுவதும் நடைபெற இருந்த வங்கி ஊழியர் ஸ்டிரைக் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.வங்கித்துறையில் போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும், வாரம் 5 நாள் மட்டுமே பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வங்கி ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை முன் வைத்து நாடு முழுவதும் மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஸ்டிரைக் நடத்தப் போவதாக வங்கி ஊழியர் கூட்டமைப்பு அறிவித்து இருந்தது. போராட்டத்தில் 9 சங்கங்களின் ஊழியர்கள் பங்கேற்பர் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.இந் நிலையில் மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட ஸ்டிரைக் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக வங்கி ஊழியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மத்திய தொழிலாளர் நலத்துறை கமிஷனருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 5 நாள் மட்டுமே பணி, பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட சில கோரிக்கைகள் குறித்து வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் ஸ்டிரைக்கை தற்காலிகமாக திரும்ப பெறுவதாக வங்கி ஊழியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Appa V
மார் 21, 2025 21:22

தனியார் வங்கிகள் தபால் அலுவலகங்கள் மற்றும் ஆன் லைன் வசதிகளே போதும் . தெருவுக்கு நாலு அரசு வங்கிகள் தேவை இல்லை ..அமெரிக்காவில் வங்கிகளில் ஒன்று அல்லது இரண்டு வாங்கி ஊழியர் தான் தென்படுகிறார்கள் ..மக்களின் வாங்கி தேவைகளுக்கு ஏஜெண்டுகள் வீட்டுக்கோ அலுவலகத்துக்கோ வந்து சேவை வழங்குகிறார்கள் .


புதிய வீடியோ