உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கியின் ஜன்னலை உடைத்து ரூ.13 கோடி தங்க நகைகள் திருட்டு

வங்கியின் ஜன்னலை உடைத்து ரூ.13 கோடி தங்க நகைகள் திருட்டு

தாவணகெரே: தாவணகெரே, நாமதியின் நேரு சாலையில் எஸ்.பி.ஐ., வங்கிக்கிளை உள்ளது. வங்கிக்கு சனி, ஞாயிறு என, இரண்டு நாட்கள் விடுமுறை இருந்தது. வங்கி பூட்டப்பட்டிருந்தது. நேற்று காலை ஊழியர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்தனர்.கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் சிதறி கிடந்தன. லாக்கர் உடைபட்டிருந்தது. அதில் இருந்த 30 லட்சம் ரூபாய் ரொக்கம், 12.95 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகள் திருடப்பட்டிருந்தன.இது தொடர்பாக, வங்கி உயர் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த நாமதி போலீசார், ஆய்வு செய்தனர். மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். நேற்று முன் தினம் நள்ளிரவோ அல்லது நேற்று அதிகாலையோ, மர்ம கும்பல் ஜன்னல் கம்பிகளை உடைத்து, உள்ளே புகுந்து திருடிச் சென்றுள்ளது.வங்கியில் மூன்று லாக்கர்கள் உள்ளன. இரண்டு லாக்கர்களை உடைக்க முடியவில்லை. ஒன்றை மட்டும் காஸ் கட்டரால் உடைத்து, பணம், நகைகளை திருடிச் சென்றுள்ளனர். கண்காணிப்பு கேமராவின் பதிவு கருவியை கொண்டு சென்றுள்ளனர்.தடயங்கள் கிடைக்காமல் இருக்க, மிளகாய் பொடியை துாவி உள்ளனர். குடியிருப்பு பகுதியில் இருந்து, வெகு தொலைவில் வங்கி உள்ளது. இதனால் திருட்டு நடந்தது தெரியவில்லை. வங்கிக்கு இரவு காவலாளியை நியமிக்கவில்லை. இது திருடர்களுக்கு வசதியாகிவிட்டது.போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Tetra
அக் 30, 2024 21:32

நம்ப முடியல. ஜன்னல ஒடச்சா உள்ள பூரலாம். அவ்வளவுதான். அப்ப கூட அலாரம் அடிச்சிருக்குமே. நகைங்க என்ன மேசை மேலயா‌வச்சிட்டுப்போனாங்க. எவனோ உள்ளவாறே செஞ்சிருப்பான்.


T.B.Sathiyanarayananan
அக் 29, 2024 16:25

If the tem and procedure are correctly followed by the Bank then they will get full insurance claim. No problem for customers.


Ramesh Sargam
அக் 29, 2024 13:12

அநேகமாக வடநாட்டு களவாளிகள் கைவரிசையாகத்தான் இருக்கும்.


Ganesun Iyer
அக் 29, 2024 11:29

SBI நம்மிடம் கொள்ளையடிக்கும் பணத்த கொள்ளையர்களுக்கு குடுப்பதே பழக்கமாபோச்சு .. SBT state bank for thief ன்னு பேரை மாத்திடலாம் ..


வாய்மையே வெல்லும்
அக் 29, 2024 10:02

எஸ்பி ஐ வங்கி நிதிநிலைமை பரமஏழை நிலவரம் போல கீதே ஒரு காவலாளி வைக்கக்கூட வக்கில்லாத லாயக்கற்ற வங்கி என்றால் எவன் நம்புறான் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை