உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொச்சி அணிக்கு ரூ.538 கோடி இழப்பீடு வழங்க பி.சி.சி.ஐ.,க்கு உத்தரவு

கொச்சி அணிக்கு ரூ.538 கோடி இழப்பீடு வழங்க பி.சி.சி.ஐ.,க்கு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட கொச்சி அணிக்கு ரூ.538 கோடியை இழப்பீடாக வழங்க பி.சி.சி.ஐ.,க்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2011ம் ஆண்டு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இருந்து கொச்சி அணியை நீக்கம் செய்து பி.சி.சி.ஐ., நடவடிக்கை எடுத்தது. உரிய வங்கி உத்தரவாதத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் சமர்ப்பிக்காததே காரணம் என்று பி.சி.சி.ஐ., விளக்கமும் அளித்திருந்தது. ஆனால், மைதான அனுமதி உள்ளிட்ட விவகாரத்தினால் மட்டுமே தாமதம் ஏற்பட்டதாக கொச்சி அணி தெரிவித்திருந்தது. பி.சி.சி.ஐ.,யின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கொச்சி அணி தொடரப்பட்ட வழக்கில் 2015ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. கொச்சி அணிக்கு ரூ.384 கோடியும். ரென்டோவஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ல்டுக்கு ரூ.154 கோடியும் என மொத்தம் ரூ.538 கோடியை செலுத்த தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் பி.சி.சி.ஐ., மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த நீதிபதி சாக்லா, பி.சி.சி.ஐ.,யின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததுடன், கொச்சி அணிக்கு உரிய இழப்பீட்டை வழங்க உத்தரவிட்டது. மேலும், மேல்முறையீடு செய்ய பி.சி.சி.ஐ.,க்கு 6 வார காலம் அவகாசம் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது பி.சி.சி.ஐ.,க்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

பாமரன்
ஜூன் 18, 2025 21:41

ஆஹா... பிசிசிஐயை விட நோகாமல் நோம்பு கும்புட பாக்குறானுவ சேட்டன்ஸ்... வெள்ளை கொடிக்கு வேலை வந்தாச்சு... ஒரு டீம் சேட்டன்க ஏரியாவில் குடுத்து ஏற்கனவே ஏமாந்து போய் இருக்கும் நம்ம ஸ்பான்ஸர் அடேஷ்னிக்கு குடுத்திடலாம்... கேட்டால் அவனுவ தான் ஏற்கனவே அங்க யாவாரம் பண்றாய்ங்க அதனால் தப்பில்ல ஸ்வாஹா அப்பிடின்னு ரங்கிடு மாதிரி பெருசுகள் வச்சி வியாக்கியானம் குடுக்கலாம்.. ஓகேவா


முக்கிய வீடியோ