உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போராடுவதில் உறுதி!

போராடுவதில் உறுதி!

உலகளாவிய அச்சுறுத்தலாக காலநிலை மாற்றம் உள்ளது. அதன் தாக்கத்தை வ ளரும் நாடுகள் உணர்ந்துள்ளன. இந்த விவகாரத்தில் வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் எந்த உதவியும் செய்யவில்லை. பன்முகத்தன்மையில் நம்பிக்கை கொண்ட இந்தியா, காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதில் உறுதியாக உ ள்ளது. - பூபேந்திர யாதவ் மத்திய அமைச்சர், பா.ஜ.,

ஓ.பி.சி.,யில் சேர்க்கக்கூடாது!

மஹாராஷ்டிராவில், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் மராத்தா சமூகத்தினரை சேர்க்கக் கூடாது. அந்த சமூகத்தினர் இட ஒதுக்கீடு பெறுவதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், ஓ.பி.சி., இட ஒதுக்கீட்டில், அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது. அப்படி வழங்கினால், மாபெரும் போராட்டம் நடத் தப்படும். - சகன் புஜ்பல் மஹாராஷ்டிரா அமைச்சர், தேசியவாத காங்.,

ஓட்டு திருட்டில் காங்.!

ஓட்டு திருட்டில் காங்கிரஸ் தான் ஈடுபடுகிறது. ராகுலு க்கு நெருக்கமானவரா ன பவன் கெரா, டில்லியில், வெவ்வேறு அடையாள எண்களுடன், இரண்டு வாக்காளர் அட்டைகளை வைத்துள்ளார். ராகுலும், அவரது கூட்டாளிகளும் தான் திருடர்கள். அதனால் தான், மற்றவர்க ளையும் அவர்கள் திரு டர்களாக சித்தரிக்கின்றனர். - பிரதீப் பண்டாரி செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !