உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முன்னாள் முதல்வரை கொன்றவருக்கான தூக்கு தண்டனையை நிறைவேற்றாதது ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி

முன்னாள் முதல்வரை கொன்றவருக்கான தூக்கு தண்டனையை நிறைவேற்றாதது ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடந்த 1995 ம் ஆண்டு பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு இன்னும் தண்டனையை நிறைவேற்றாதது ஏன் என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.சண்டிகரில் உள்ள தலைமைச்செயலகத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தார். அவருடன் மேலும் 16 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பல்வந்த் சிங் ராஜோனா என்பவனை போலீசார் கைது செய்தனர். அவருக்கு கடந்த 2007 ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்ததைத் தொடர்ந்து 2012ம் ஆண்டு சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி கருணை மனு தாக்கல் செய்து இருந்தது. கடந்த ஆண்டு 2023ம் ஆண்டு அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தூக்கு தண்டனையை ரத்து செய்ய மறுத்து விட்டது. கடந்த ஜன., மாதம் தாக்கல் செய்த மனுவில், கருணை மனு குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.இந்நிலையில், தனது மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தார். அவனது மனுவில், 28.8 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டதாகவும், அதில் 15 ஆண்டுகள் தூக்கு தண்டனை கைதியாகவும் இருந்ததாகவும் தெரிவித்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் அஞ்சாரியா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி ஆஜராகி வாதாடியதாவது:மனுதாரரின் கருணை மனு மீது என்ன முடிவெடுக்கப்பட்டது என தெரியவில்லை என்றார்.அதற்கு அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜன், இது குறித்து கருத்து பெற்று தெரிவிப்பதாக கூறினார்.ரோத்தகி மேலும் கூறுகையில், ஒருவருக்கு என்ன நடக்கிறது என தெரியவில்லை. கருணை மனு மீது உரிய காலத்தில் முடிவெடுக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது. ராஜோன்னா இந்திய குடியுரிமை பெற்றவர். இது ஒன்றும் இந்தியா பாகிஸ்தான் விவகாரம் அல்ல என்றார்.நீதிபதிகளிடம், குற்றத்தின் தன்மை குறித்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜன் விளக்கமளித்தார்.இதனைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது: இன்னும் குற்றவாளியை தூக்கு தண்டனையை நிறைவேற்றாதது ஏன்? இதற்கு யாரை குறை சொல்வது. தண்டனைக்கு நாங்கள் தடை விதிக்கவில்லை. குற்றவாளி கருணை மனு தாக்கல் செய்யவில்லை. அவரது சார்பில் குருத்வாரா குழு தான் மனு தாக்கல் செய்துள்ளது எனக்கூறி விசாரணையை அக்.,15க்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Anbuselvan
செப் 25, 2025 18:09

இந்த கேள்வியை இப்போது கேட்கும் உச்ச நீதிமன்றம் ஏன் முன்னாள் பிரதம மந்திரியை கொன்றவர்களுக்கு கேட்கவில்லை. முன்னாள் பிரதம மந்திரியை கொன்றவர்களை விடுதலையும் செய்தது இந்த நீதிமன்றம். இப்போ முன்னாள் முதல்வரை கொன்றவருக்கு ஏன் தூக்கு தண்டனை நிறைவேற்றவில்லை என கேட்கிறது. இப்போதாவது முழித்து கொண்டதே என நினைக்க தோன்றுகிறது


Subburamu K
செப் 25, 2025 17:11

But if execution order is issued, the same Supreme court immediately served stay orders.


ஆரூர் ரங்
செப் 25, 2025 13:04

பிரச்சினைகள் வெடிக்கும். ஆமாம் ஆத்மி ஆட்சியால் சமாளிக்க முடியாது. மத்திய உதவியைக் கேட்பார்கள். பின்னர் கலவர இறப்புகளுக்கு மத்திய பிஜெபி அரசின் மீது பழி விழும். இதெல்லாம் தேவையா? அதற்கு பதில் சிறையில் ஓசி சாப்பாடு போடலாம்


Venugopal S
செப் 24, 2025 22:44

இதென்ன பிரமாதம், மூவாயிரம் அப்பாவி சிறுபான்மை மக்களைக் கொன்றவர்களை நாட்டின் மிகப்பெரிய பதவியில் அமர்த்தி அழகு பார்ப்பார்ப்பவர்கள் நாங்கள்! எங்க கிட்டயேவா?


கல்யாணராமன்
செப் 24, 2025 22:35

முன்னாள் பிரதமர் ராஜிவக்காந்தியை கொலை செய்தவர்களை விடுதலை செய்ய சொன்ன உச்ச நீதிமன்றம் இப்படி கேள்வி கேட்கலாமா?


ஆரூர் ரங்
செப் 24, 2025 22:06

பேரறிவாளனுக்கு விருந்தளித்த முதல்வரிடம் இது போன்ற கேள்வியை கேட்பீர்களா? அவனை எந்த கோர்ட்டும் நிரபராதி என கூறவில்லையே


அஜய் இந்தியன் தெற்கு தமிழகம்
செப் 24, 2025 22:04

இங்கு பிரதமரை கொன்ற கொலை குற்றவாளிகளை, தியாகி போல் வீட்டுக்கு வரவழைத்து விருந்து வைக்கும் கும்பல் தமிழகத்தில் உள்ளது. அதும் திமுக, அதிமுக, VCK, NTK, PMK, இன்னும் பல திராவிட கட்சிகள் இந்த வேலையை செய்கிறது. ஏன் உச்ச நீதிமன்றம் முன்னாள் பிரதமரை கொன்ற கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய அனுமதி கொடுத்தது?, ஏன் தூக்கில் போட வில்லை?, இவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? மாநில அரசு ஒரு தீர்மானம் சட்டசபையில் எடுத்து விட்டால் கொலைகளில், தியாகி ஆகி விட முடியுமா?. இன்றும் பல குற்றவாளிகள் அரசியல்வாதிகள் தலையிட்டால் தப்பித்து வருகிறார்கள், நீதிமன்றம் வேடிக்கை பார்க்கிறது, காவல்துறை ஆளும் கட்சி, மீண்டும் ஆட்சி பிடிக்கும் எதிர்கட்சி கட்சிக்கு பயந்து வேறுவழியில்லாமல் கையை பிசைந்து கொண்டு கையை கட்டி கொண்டு வேடிக்கை பார்க்கிறது. இதற்கு முதல் காரணம் யார்? இதை முதலில் உச்ச நீதிமன்றம் விளக்கம் கொடுக்க வேண்டும்


Thravisham
செப் 25, 2025 04:30

இதற்கு முக்கிய காரணமே தகுதியில்லாமலேயே சிபாரிசு மூலம் நீதிபதிகள் தங்களை தாங்களே தேர்ந்தெடுப்பதுதான். கொலிஜியம் ஓர் கலீஜியம்


Ramona
செப் 24, 2025 21:51

என்ன இதுநம்ம சு கோர்ட்டா இப்படி ஒரு கேள்வி கேட்கிறாங்க, இல்ல நம்ம நாட்டுல நீ....தி... இன்னும் இருக்கு என காண்பிக்கவா?


கலைஞர்
செப் 24, 2025 21:47

பிரதமரை கொன்னவங்களையே வெளியே விட சொன்னீங்க..இது முதல்வர் தானே... இவர்களையும் வெளியே விட சொல்லிடுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை