மத்திய அரசு நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணி: 695 பேருக்கு அருமையான வாய்ப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பெல் நிறுவனத்தில் 695 அப்ரென்டிஸ் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 23.இந்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் (Bharat Heavy Electricals Limited) 695 அப்ரென்டிஸ் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் திருச்சியில் உள்ள நிறுவனத்தில் பணி அமர்த்தப் படுவார்கள்.பட்டதாரி பணியிடங்கள்
சிவில் இன்ஜினியரிங்- 20.கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்- 10எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்- 5எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் - 5மெக்கானிக்கல் இன்ஜினியரிங்- 95டிப்ளமோ பணியிடங்கள்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் - 70கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்- 10சிவில் இன்ஜினியரிங் - 10 எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் - 10. எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - 10 Trade (ITI) Apprentices
ஏசி மெக்கானிக் - 7எலக்ட்ரீசியன் - 40பிட்டர் - 180இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் - 10மோட்டார் மெக்கானிக்- 10டர்னர்- 20வெல்டர்- 120Machinist - 30COPA - 13கல்வித் தகுதி என்ன?
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.டிப்ளமோ பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். Trade பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.வயது வரம்பு
விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.தேர்வு செய்வது எப்படி?
ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பிப்பது எப்படி?
http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளத்தில் முதலில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் https://trichy.bhel.com/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.